
கோத்தகிரி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மேற்கே உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை நகரமாகும். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டம் ஊராட்சிய ஒன்றியமாகும்.
கோடை விடுமுறையில்இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்.
1. உயிலட்டி நீர் வீழ்ச்சி.
இனிமையான தாவரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆச்சரியமாகும். படிகளால் ஆன கற்பாறைகள் வழியாக நீர் கீழே விழுந்து அமைதியான மற்றும் அழகிய காட்சியை நம் கண் முன்னே உருவாக்குகிறது. நிதானமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. மற்றும் அருவி நீரின் சத்தம் நம் வருகையின்போது ஒரு இயற்கையான அழகான தினத்தை பார்க்கும்போது கண்களுக்கு இக் காட்சியை வழங்குகிறது. திறந்திருக்கும் நேரம் -சூரிய உதயம் முதல் சூரிய ஹஸ்தமனம் வரை. நுழைவு கட்டணம் இல்லை.
2.குயின் நீர்வீழ்ச்சி.
கோத்தகிரி தாலுகாவில் மறைந்திருக்கும் இந்த குயின் நீர்வீழ்ச்சி ஒரு மயக்கும் நீர் வீழ்ச்சி. பாறைகளின் பிளவுகள் வழியாக நீர் கீழே விழுவது அழகாகக் காட்டுகிறது. பகல் நேரத்தில் சுற்றுலாவிற்கு பிரபலமான இடம் இது. கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், கோத்தகிரிபேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இங்கு பார்வையிட சிறந்த வசதியான இடங்களில் ஒன்றாகும்.
திறந்திருக்கும் நேரம் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம்வரை. நுழைவு கட்டணம் இல்லை.
3. கோடநாடு காட்சி முனை.
கோடநாடு வியூ பாயிண்ட் நீலகிரி மலைகளின் மூச்சு அடைக்ககூடிய பரந்த காட்சிகளை அள்ளி வழங்குகிறது. இது மிகவும் அழகிய பாதைகளில் ஒன்றாக புகழ்பெற்றது. இது இயற்கை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கோடை விடுமுறை தலமாக அமைகிறது. உருளும் மலைகள் மூடுபனி மூடிய பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், ஆறுகளின் அழகிய பார்வையை அள்ளி வழங்குகிறது.
நேரம் - திங்கள் டு வெள்ளி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
சனி ஞாயிறு - காலை ஒன்பது முதல் மாலை ஆறு மணி வரை. நுழைவுக்கட்டணம் இங்கு இல்லை.
4.கேத்தரின் நீர்வீழ்ச்சி.
கோத்தகிரி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கேத்தரின் நீர்வீழ்ச்சி மைசூர் மாவட்ட ஆட்சியர் ஜி.டி காக்பர்னின் துணைவியாரின் பெயர் இடப்பட்டது. இது கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு கண்கவர் நீர் வீழ்ச்சியாகும். 250 அடிக்கும் மேல் உயரத்தில் இருந்து வரும் இந்த அழகான நீர்வீழ்ச்சி, நீலகிரி மலைகளின் பசுமையான பசுமைக்கு மத்தியில் ஒரு மயக்கும் அழகிய காட்சியை வழங்குகிறது. இங்கு பல்வேறு கோணங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அருவிகளின் தொடர்ந்த காட்சிகளை ரசிக்கலாம். மலை ஏறுபவர்கள், பறவையைப் பார்க்கும் ஆர்வலர்கள் தாங்கள் விரும்பும் அனைத்தையும் இங்கு காணலாம்.
காலை ஆறு மணி முதல் நாலு ஆறு மணி வரை பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் இல்லை.
5. லாங் வுட் ஷோலா காடு
லாங் வுட் ஷோலா என்பது ஒரு அழகிய பசுமையான காடு. இது தீண்டப்படாத அழகின் மத்தியில் அமைதியான பின்னழைகை வாரி வழங்குகிறது. இந்த அடர்ந்த வனப்பகுதி பல்வேறு வகையான தாவரங்கள் விலங்கினங்களுக்கும், உள்ளூர் தாவர இனங்களுக்கும், நரி, காட்டெருமை போன்ற விலங்குகளுக்கும், தாயகமாகவும் அமைதியான சூழ்நிலையில் அழகை ரசிக்கலாம். இங்கு பறவை ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் புகைப்பட கலைஞர்களுக்கு இது ஒரு சொர்க்கம் ஆகும்.
காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை பார்க்கலாம். நுழைவு கட்டணம் - ஒரு நபருக்கு ரூபாய் 100.
6. கில் -கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேல் வடகிழக்கில் அமைந்துள்ள வினோதமான கோட்டையில் ஒரு வினோதமான கிராமம். தினசரி கூட்ட நெரிசல் இருந்து அமைதியான ஓய்வு அளிக்கிறது. இங்கு தேயிலை தோட்டங்கள், தேயிலைகளை வாடுதல், உருட்டுதல், நொதித்தல், உலர்த்துதல் போன்ற தொலைந்துபோன நடை முறைகளை கண்டு கழிக்கலாம்.
ஊட்டியில் இருந்து கோத்தகிரிக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலைத்தொடர்கள் வழியாக வளைந்து சென்றால் வரும். கோயம்புத்தூரில் இருந்து பயணம் செய்தாலும் சரி, குன்னூருக்கு செல்வது எளிது. அங்கிருந்து உங்கள் இலக்கை அடைய இருபது கிலோ மீட்டர் பயணம் மட்டுமே.
விமானம் மூலம் - கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து கோத்தகிரிக்கும் செல்லலாம்.
கோத்தகிரி பயணத்திற்கு அக்டோபர் முதல் மே மாதம் வரை பார்க்கலாம். கோடை விடுமுறையில் கோத்தகிரி சென்று இயற்கை, ரம்யமான காட்சிகளையும் சென்று ரசித்து வாருங்கள்.