மராட்டிய மாநில - மனங்கவர் காஷ்மீர்!

Beautiful Kashmir!
payanam articles
Published on

-ஆர். மீனலதா

டல் மட்டத்திலிருந்து 4700 அடி உயரத்திலும், மும்பை மாநகரிலிருந்து 247 கி.மீ. தொலைவிலும் இருக்கும் மஹாபலேஷ்வர் எனும் குளுகுளு மலைப்பிரேதசம்.

மும்பை மாநகர நெருக்கடி, பொல்யூஷன் மற்றும் கோடைவெயிலில் இருந்து விடுதலை பெற்று 3 – 4 நாட்கள் சுற்றுலா செல்வதற்கேற்ற அருமையான இடம். சுமார் 6½ மணி நேரப்பயணம். டூரிஸ்ட் பஸ்களும், ப்ரைவேட் கார்களும் மலைப்பாதையில் வளைந்து வளைந்து செல்கையில் இயற்கையழகு மனதைக்கவரும். இங்கே என்னென்ன பார்க்கலாம்?

வற்றாத நீர்க்குமிழிகள்

இங்குள்ள சிவன் கோயில் பிரசித்தி பெற்றது. சிவலிங்க பீடத்தைச் சுற்றி உத்திராட்ச மாலை போன்ற வடிவில் இருக்கும் நீர்க்குமிழிகள் வருடம் முழுவதும் வற்றாமல் இருப்பது மாபெரும் அதிசயமாகும்.

பஞ்சகங்கா கோயில்:

பாண்டவர்கள் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள நந்தியின் வாயில் இருந்து விழும் குளிர்ந்த நீர் வற்றாத ஒன்றாகும். இந்த நீர் கங்கா; யமுனா; சரஸ்வதி; கோகாதவரி; சாவித்திரி ஆகிய ஐந்து (பஞ்ச) நதிகளிலிருந்து வருவதாக ஐதீகம்.

எக்கோ பாயிண்ட்:

இங்கு நின்று சத்தமாக எது பேசினாலும் அது ஏழு தடவைகள் எதிரொலிக்கும். “I love you’ என்று அநேகர் கத்துவார்கள்.

ஆர்தர் சீட் பாயிண்ட்:

ஆங்கிலக் கனவான் ஆர்தர் போல அருமையாக அமைக்கப்பட்டுள்ள இடம்.

வென்னா ஏரி
வென்னா ஏரி

ஊசிமுனைப் பாயிண்ட்:

இதன் எதிர்ப்புறம் நின்று பார்த்தால், ஒரு யானையின் தும்பிக்கை போல இருக்கும்.

வென்னா ஏரி:

ஏரியில் படகு சவாரி போகலாம்; ஏரிக்கரையில் குதிரை சவாரி செல்லலாம். விதவிதமான ஐஸ் க்ரீம்களை ருசித்துச் சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரி; ராஸ் பெர்ரி; மல்பெர்ரி பழங்கள் அருமையாக கிடைக்கும். இவற்றிலிருந்து செய்யப்படும் ஐஸ்க்ரீம்களின் டேஸ்ட்டே தனி. உள்ளூர் தயாரிப்பு.

ப்ரதாப் கோட்டை:

கடல் மட்டத்திலிருந்து 3543 அடியிலும், மஹாபலேஷ்வரிலிருந்து 25 கி.மீட்டர் தூரத்திலும் இருக்கும் ப்ரதாப் காட், சிவாஜி மகாராஜாவின் கோட்டையாகும். 400 படிகள் மேலே ஏறிச்செல்ல வேண்டும். சத்ரபதி சிவாஜி மகராஜ், ஜெனரல் அப்சல்கானுடன் சண்டையிட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம். அழகான பூங்காவின் நடுவே சிவாஜி மகாராஜாவின் கம்பீரமான சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பஞ்ச் கனி:

மஹாபலேஷ்வரின் இன்னொரு புறமிருந்து 20 கி.மீட்டர் மேலே சென்றால் வருவது பஞ்ச் கனி ஆகும்.

மலைப் பிரதேசமாகிய இங்கே மலைமுகடுகள் இயற்கையிலேயே சமதளமாக அமைந்துள்ளன. இங்கு 5 சமதளங்களிருப்பதால் பஞ்ச்கனி என்றழைக்கப்படுகிறது. ரெஸிடென்ஷியல் போர்டிங் ஸ்கூல்கள் அநேகம்

இதையும் படியுங்கள்:
ஜெய்ப்பூரில் ஜம்மென்று சுற்றிப் பார்க்க வேண்டிய 6 முக்கியமான இடங்கள்!
Beautiful Kashmir!

பஞ்ச்கனியின் புகழ் பெற்ற இடம் Table Land (டேபிள் லேண்ட்)தான். ஆசியா கண்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ப்ளாட்டோ (Plateau) இந்த டேபிள் லேண்ட்.

டேபிள் லேண்ட் பஞ்ச் கனி சிட்டியிலிருந்து 200 அடி உயரத்தில் 92 ஹெக்டேர் (8 கி.மீ) பரப்பளவில் சமதளமாக அமைந்துள்ளது. இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் கண்கொள்ளா காட்சி. இங்கிருக்கும் பாரா க்ளைடிங்கில் பறப்பது த்ரில்லிங்காக இருக்கும்.

சுத்தமான காற்றை சுவாசிக்கவும்; சுகமாக காலார நடக்கவும், சுவாரஸ்யமாக இயற்கையழகை ரசிக்கவும், சுவை மிக்க பழங்களை ருசிக்கவும் ஏற்ற சுகமான மலைப்பிரதேசம். தரமான ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com