முதுமையைத் தள்ளிப்போட உதவும் 7 உணவுகள்!

Youthful appearance
Youthful appearancehttps://www.toptamilnews.com

முதுமை என்பது எவராலும் எளிதில் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிதர்சன உண்மை. குறைந்தபட்சம் முதுமையை தள்ளிப்போட வழியுண்டு என்று ஒருவர் கூறினால், ‘அப்படியா? அது எப்படி?’ என்று கேட்டுக்கொண்டு ஓடி வர பலர் இருப்பார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு பிரத்யேகப் பதிவுதான் இது. இதில் நம் உடல் தோற்றத்தில் முதுமை அடைந்துவிட்டதைக் காட்டும் அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்க உதவக்கூடிய சில வகை உணவுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

* ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ள பெரி வகைப் பழங்கள், தீங்கு விளைவிக்கும் ஃபிரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி செல்களில் சிதைவேற்படுவதைத் தடுத்துப் பாதுகாக்கின்றன.

* பாதாம், வால்நட், சியா மற்றும் ஃபிளாக்ஸ் விதைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகளையும் வைட்டமின் E சத்தையும் வாரி வழங்க வல்லவை.

* சால்மன், துனா, மாக்கெரேல் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்த மீன்களை உண்ணும்போது அவை உடலில் வீக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படவும் உதவுகின்றன.

* புரோக்கோலி, காலே மற்றும் பிரஸ்ஸல் ஸ்பிரௌட்ஸ் போன்ற க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்களில் உள்ள ஒரு கூட்டுப் பொருள் உடலில் வீக்கங்கள் உண்டாவதையும், கேன்சர் நோய் வரும் அபாயத்தையும் தடுக்கக்கூடிய சக்தியுடையது.

இதையும் படியுங்கள்:
ஏர் கூலர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
Youthful appearance

* எழுபது சதவிகிதம் கோக்கோ அடங்கியுள்ள டார்க் சாக்லேட்டை குறைந்த அளவில் உட்கொள்ளும்போது அது உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்களைத் தருகிறது.

* வைட்டமின் A சத்து அதிகம் நிறைந்துள்ள ஸ்வீட் பொட்டட்டோ உண்ணும்போது அது உடலில் கொலாஜன் உற்பத்தி பெருக உதவி புரிகிறது. இதனால் சருமத்தில் சூரியக் கதிர்வீச்சு படும்போது ஏற்படும் சிதைவுகள் தடுக்கப்பட்டு சருமம் இளமைத் தோற்றம் பெறும்.

* ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் பாலிபினால்களும் க்ரீன் டீயில் அதிகம் நிறைந்துள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் ஃபிரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி அது இளமையுடன் செயல்படவும் உதவி புரிகின்றன.

மேற்கூறிய உணவுகளை அனைவரும் தவறாமல் உட்கொள்வோம்; இளமைத் தோற்றத்தை இழக்காமல் பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com