மும்பையில் சுற்றிபார்க்க வேண்டிய முக்கியமான 8 அழகிய கடற்கரைகள்!

8 beautiful beaches in Mumbai!
Beautiful beaches
Published on

காராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சுற்றுலா செல்பவர்கள் நகரில் அதனை ஒட்டி அமைந்திருக்கும் கடற்கரையில் பொழுதை போக்காமல் திரும்ப மாட்டார்கள். மும்பைக்கு அருகிலேயே மக்கள் நடமாட்டம் குறைவான அமைதியான, சூழல் கொண்ட கடற்கரைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் நண்பர்கள், குடும்பத்தினரும் சுற்றுலா செல்ல சிறந்த 8 கடற்கரைகள் எது என்று பார்ப்போம்.

கெல்வா கடற்கரை

இந்த கடற்கரையை ஒட்டி சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு வளர்ந்திருக்கும் மரங்கள் வனத்துக்குள் இருக்கும் இதில் ஒரு கடற்கரைக்குள் நுழைந்தது போன்ற உணர்வை தரும். வார இறுதி நாட்களில்கூட சுதந்திரமாக கடற்கரையில் உலாவி மகிழலாம். மக்கள் கூட்டம் அதிகம் இங்கு காணப்படாது. இங்கு சென்றால் கடற்கரை சூழலை இனிமையாக்கி விடும். மும்பை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். பேருந்து மூலமாகவும் செல்லலாம்.

ராஜோடி கடற்கரை

சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலம் இல்லாத இந்த கடற்கரை அமைதியான சூழலில் உள்ளது. இரவிலும் தங்கி கடல் அலைகளின் அழகை ரசிக்கலாம். இங்கு ஏராளமான ஓய்வு விடுதிகளும், கடற்கரை வீடுகளும் உள்ளன. நீர் விளையாட்டுகளை ரசிப்பவர்களுக்கு ஏற்ற கடற்கரை பிரதேசமாகவும் இது அமைந்திருக்கிறது. அருகில் உள்ள ரெசார்ட்களில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. கடற்கரை பகுதியில் கூட்டமாக உலவும் பறவைகளை படம் பிடித்தும் ரசிக்கலாம். விரார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைக்கு பேருந்து ரயில் மூலம் பயணம் செய்யலாம்.

தஹானு கடற்கரை

இக்கடற்கரை 17 கி.மீ க்கு மேல் பறந்து விரிந்துள்ளது. இது பால்கார் தாலுகாவில் அமைந்துள்ளது. மற்றும் பாதுகாப்பான சூழல் கொண்டது. இந்த கடற்கரையில் குடும்பத்தினர் சுற்றுலா செல்ல ஏற்றது. இந்த கடற்கரை நகரத்தின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பி உள்ளது. ஊறுகாய் பப்பாளி பாரம்பரிய மசாலா, தேன் போன்ற சிறு தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. ஆக்ரோஷம் இல்லாத அலைகளின் தாலாட்டில் அமைதியாக காட்சியளிக்கும் கடற்கரைக்கு வாகனத்தில் செல்வதுதான் சரியான முறை .டாக்ஸி ஆட்டோ பேருந்து மூலமும் செல்லலாம்.

ஊரன் கடற்கரை
ஊரன் கடற்கரை

ஊரன் கடற்கரை

நவி மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை பைர்வாரி கடற்கரை என்றும் அழைக்கப் படுகிறது. இந்த பகுதியில் மீனவர் கிராமங்கள் இருந்தாலும் நெல் உற்பத்தி அதிக அளவில் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும் தீபகற்ப கடற்கரையாகவும் இது விளங்குகிறது. கடற்கரை பிரபலமானதாக இருந்தாலும் சுற்றுப்பகுதிகளில் பல கோவில்களும் உள்ளன. இந்த கடற்கரையில் நின்று பார்த்தால் மும்பை மாநகரம் அழகுறத் தெரியும். கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து படகு மூலம் ஊரன் கடற்கரையை அடையலாம்.

முருத் கடற்கரை

இந்த கடற்கரையின் நடுவில் உள்ள தீவில் முருத் - ஜன்ஜிரா கோட்டை கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்றது .கடலில் அலை குறைவாக இருக்கும்போது படகு மூலம் இங்கு சென்று அடையலாம். 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பேரரசர் மாலிக் ஆம்பரால் இது கட்டப்பட்டது. பாரா கிளைடிங் உட்பட சில நீர் விளையாட்டுகளும் ,இந்த கடற்கரையில் பொழுதை போக்க செய்யும். இந்த கடற்கரைக்கும் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்தும் படகில் செல்லலாம். மண்ட்வா ஜெட்டி வழியாகவும் செல்லலாம்.

அக்ஸா கடற்கரை - மலாட்

இது மும்பையில் மலாட்டில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும் இது. அதன் அழகிய அழகுக்காக அறியப்படுகிறது. மற்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வு மற்றும் ஓய்வு எடுப்பதற்காக அடிக்கடி வருவார்கள். இங்கு நீர் விளையாட்டு மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை இது வழங்குகிறது .இங்கு அதிர்ச்சியூட்டும் சூரிய அஸ்தமனத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும். மிகவும் அழகிய இடமாக அமைகிறது. இங்கு தங்க மணலுடன் கூடிய அழகும், நடைப்பயணத்துக்கும் சூரிய அஸ்தமனத்துக்கும் ஏற்ற இடம்.

ஜுஹு கடற்கரை
ஜுஹு கடற்கரை

ஜுஹு கடற்கரை

இங்கு பரந்த கடற்கரை மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளுக்கு பிரபலமானது. பொழுதுபோக்கு சவாரிகள் குதிரை வண்டிகள் துடிப்பான சந்தைகள் ஆகியவை இதில் அடங்கும். சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு ஹாட்ஸ்பாட் ஆகும். இங்கு பல்வேறு கலாச்சார அனுபவங்களை வழங்குகிறது. கடற்கரையில் அமைதியான அழகில் குளிப்பது மிகவும் பிரபலமானது.

கோராய் கடற்கரை

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். அதன் அழகிய நிலப்பரப்புகள் அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. பல்வேறு நீர் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடற்கரைப் பொழுதுபோக்குகளை வழங்குகிறது. அற்புதமான சூரிய அஸ்தமனம் அமைதியான கடல் அலைகளுக்கு பெயர் பெற்றது. மணல் நிறைந்த கடற்கரையில் நிதானமாக நடந்து செல்வதற்கு ஏற்றது. சுத்தமான அழகிய கடற்கரை, அமைதியான சூழ்நிலை, கேளிக்கை பூங்கா அருகில் உள்ளது மிக சிறப்பு.

இதையும் படியுங்கள்:
நாம் ஏன் பயணம் செய்ய வேண்டும்?
8 beautiful beaches in Mumbai!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com