கர்நாடகாவில் உள்ள மங்களூரில் அழகான கடற்கரைகள், பழங்காலக் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன, இங்கு அவசியம் பார்க்க வேண்டிய 9 இடங்களை பற்றி பார்ப்போம்.
மங்களூரில் உள்ள பிரபலமான நன்கு பராமரிக்கப்படும் கடற்கரைகளில் ஒன்று. இதனுடைய மணல் தங்க நிறத்தில் அழகாக இருக்கும். இங்கு ஜெட் ஸ்கீயிங், படகு சவாரி போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. கடற்கரை சுத்தமாக பராமரிக்கப்படுவதால் கூட்டம் கூட்டமாக மக்கள் இங்கே வருகிறார்கள். கடலின் ஆக்ரோஷமான அலைகளுக்கு நடுவே இங்கு என் அக்கா, அப்பாவுடன் படகு சவாரி செய்தது மறக்க முடியாத நிகழ்வாகும். நடுக்கடலை நெருங்கும் போது படகு தண்ணீரில் மூழ்குவதைப் போல அனுபவம் தந்தது திக் திக் நிமிடங்களாக அமைந்தது. ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம்.
மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் அமைதியான கடற்கரை. இங்கு சவுக்கு மரங்கள் வரிசையாக அமைந்திருப்பதும் சூரிய அஸ்தமன காட்சிகளும் அழகோ அழகு!
இங்கு ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. அதில் ஏறி கடற்கரையின் அழகான பரந்த காட்சிகளை காணலாம். இந்தக் கடற்கரை தூய்மை மற்றும் அமைதிக்கு பெயர் பெற்றது.
நகரத்தின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள மற்றொரு அழகான கடற்கரை. இங்கு அதிக ஆக்ரோஷம் இல்லாத அமைதியான கடல் அலைகளைக் காணலாம்.
1784 இல் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க கண்காணிப்பு கோபுரம் ஆகும். படையெடுக்கும் போர்க்கப்பல்களை கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. தற்போது இந்த நகரத்தின் கடந்த கால வரலாற்றுக்கு சான்றாக இருக்கிறது. குருபுரா நதியின் காட்சிகளை இங்கிருந்து கண்டு களிக்கலாம்.
மங்களூரில் உள்ள மிகப்பெரிய பூங்கா. இங்கு பல்வேறு வகையான தாவரங்கள் உள்ளன. சிறிய மிருகக்காட்சி சாலையும் உள்ளது. சில நேரங்களில் இசை நீரூற்றும் நடைபெறும்.
மங்களூரில் இருந்து சற்று தொலைவில் இருந்தாலும் ஒரு பரந்த அழகான உயிரியல் பூங்காவும், தாவரவியல் பூங்காவும் இணைந்த பகுதி. படகு சவாரி வசதிகளுடன் கூடிய ஏரி, ஒரு அறிவியல் மையம், ஒரு பாரம்பரிய கிராமம் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானம் கூட உள்ளன. நிதானமாக பொறுமையாக இந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.
மங்களூரின் பழமையான அரசு அருங்காட்சியகம் இது. பழங்கால நாணயங்கள், ஆயுதங்கள், கவசங்கள், ஓவியங்கள் மற்றும் பிற கலைப் பொருட்களின் தொகுப்பு இங்கு உள்ளது. இந்த பிராந்தியத்தின் வரலாற்றைப் பற்றிய நுண்ணறிவை விளக்குகிறது.
இது சுற்றுலாத் தலம் இல்லை என்றாலும் கர்நாடகாவில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் ஏழாவது பெரிய துறைமுகம். காபி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உட்பட பல்வேறு சரக்குகளை கடல் வழியாக இங்கிருந்து தான் கொண்டு செல்கிறார்கள். அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற ஆழ்கடல் துறைமுகமாகும். பெரிய கப்பல்களை கையாளவும் சர்வதேச வர்த்தகம் நடக்கவும் இந்த துறைமுகம் காரணமாக இருக்கிறது.