
குடவாழை அரிசி ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த அரிசியில் சோடியம், பொட்டாசியம், அதிக அளவு கார்போஹைட்ரேட், டயட்டரி ஃபைபர், நியாசின், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, B-6 போன்றவை நிறைந்துள்ளன.
குடவாழை அரிசியில் தினமும் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் பலம் பெறும். இந்த அரிசியை தினமும் எடுத்துக் கொள்வதனால், உள் உறுப்புகள் பலமடைவதுடன், தேகம் பளபளப்பாகும்.
பொதுவாக அரிசி வகைகள் என்றாலே சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாது என்று சொல்வார்கள்.. ஆனால், குடவாழை அரிசியில் மட்டும் புரோட்டீன், நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து ஆகியவை அதிமாக உள்ளதால், இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம் .. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கவும் இந்த அரிசி உதவுகிறது.
நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதால், இந்த அரிசி, நுரையீரலின் நண்பன் என்றும் அழைக்கப்படுகிறது.. ஆஸ்துமாவையே விரட்டக்கூடிய வல்லமை கொண்டது குடவாழை அரிசி..
குடவாழை அரிசி குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி, அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கலுக்கு இது ஒரு அருமருந்தாக விளங்குகிறது.
உடலில் ஏற்படும் பல வகையான வலிகளைக் கட்டுப்படுத்தி, குறைக்க இந்த அரிசி உதவுகிறது. குறிப்பாக எலும்புகள் சம்பந்தமான மூட்டு வலிகளுக்கு இது சிறந்தது. உடலுக்கு அதிக ஆற்றலையும் அளிக்கிறது.
இரும்புச் சத்து நிரம்பிய, குடவாழை அரிசியை தினமும் உட்கொள்வது ஆக்ஸிஜனை உறிஞ்சுவதற்கும், உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் செல்களுக்கும் உதவும். உடலில் ஆக்ஸிஜனின் மேம்பட்ட நிலை உங்கள் மனநிலையை உயர்த்தி உற்சாகமாக உணர வைக்கும்.
குட வாழை அரிசியின் தவிடு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களை தடுக்கவும் உதவுகிறது.
குடவாழை அரிசி உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை உடனடியாக போக்குகிறது. அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கிறது..
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுக்க குடவாழை அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் குணமாகும்.
தசை சிதைவு, உடல் சோர்வு, எடை இழப்பு, பலவீனம், இரத்த சோகை மற்றும் காயம் தாமதமாக ஆறுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு குடவாழை அரிசி ஒரு அருமருந்து.
பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான மாதவிடாய் இரத்த இழப்பு, தசை மற்றும் எலும்பு பிரச்சனைகள், தூக்க பிரச்சனைகள், குமட்டல், வயிற்று வலி, அல்சர், முடி உதிர்தல், மற்றும் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கும் குடவாழை அரிசி அருமருந்தாக செயல்படுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)