இந்தியாவில் ஒரு "மினி தாய்லாந்து"!

ஜிபி...
ஜிபி...

தேன் நிலவுக்கு தாய்லாந்து மிகவும் பிரபலமானது. ஆனால் எகிறும் பட்ஜெட்டை நினைத்து தாய்லாந்து செல்ல முடியாதவர்கள் கூட இந்த மினி தாய்லாந்துக்கு ஒரு விசிட்  அடிக்கலாம். 

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள இந்த மினி தாய்லாந்து மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்குள்ள கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையும், சிலைகளும் தாய்லாந்தை நமக்கு நினைவுபடுத்துகிறது.

இங்குள்ள மலைகளும், பசுமையும், இயற்கை காட்சிகளும், நீர்வீழ்ச்சிகளும், நதியும் நம்மை ஹிமாச்சலின் சுற்றுப்பயணத்தை என்றும் மறக்க முடியாத அனுபவமாக ஆக்கும். 

இந்த விடுமுறைக்கு குடும்பத்துடன் செல்ல நம் இந்தியாவிலேயே தாய்லாந்தை மிஞ்சும் அழகான இயற்கை கொஞ்சம் இடம் உள்ளது தெரியுமா? கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு இடம். இயற்கை கொஞ்சும் இந்த "மினி தாய்லாந்து"க்கு இந்த விடுமுறையில் ஒரு சுற்றுலா தாராளமாக செல்லலாம். 

இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள "மினி தாய்லாந்து" என அழைக்கப்படும் ஜிபி (JIBHI) அமைதியான ஒரு சிறிய கிராமமாகும்.. இது பசுமையான காடுகள், அழகிய மலைகள், நீரோடைகள் என இயற்கை காட்சிகள் நிறைந்த அற்புதமான இடமாகும். ஜிபி அதன் பாரம்பரிய மர வீடுகளுக்கும் பெயர் பெற்றது.

அடர்ந்த காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள அழகான நீர்வீழ்ச்சியும், இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பாயும் நதியும் நம் இதயத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

ஜிபி அதன் அடர்ந்த தேவதாரு மரங்களுக்கும், ஏரிகளுக்கும், பழங்கால கோவில்களுக்கும் மிகவும் பிரபலமானது.

இங்குள்ள புத்த ஆலயத்தில் அவரது வாழ்க்கையின் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய ஓவியங்களும், சுவர் ஓவியங்களும், கோவிலின் அமைதியான சூழலும் நம்மை வெகுவாக கவர்கிறது.

ஜிபி யில் பார்க்க வேண்டிய இடங்கள்:

1) ஜலோரி பாஸ்: Jalori Pass

Jalori Pass
Jalori Pass

இது குலு பள்ளத்தாக்கையும் சிம்லா பள்ளத்தாக்கையும் இணைக்கும் அழகிய மலைப்பாதையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 10, 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது பனி மூடிய மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. இங்கு மலை ஏற்றம், நடைப்பயணம் மற்றும் முகாம்களுக்கு ஒரு அழகிய இடமாக அமைந்துள்ளது. இதன் உச்சியில் அமைந்துள்ள காளி கோவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஜலோரி பாஸ் மே முதல் நவம்பர் வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். பசுமையான காடுகள் நீரோடைகள் காட்டு பூக்கள் நிறைந்த இந்த பகுதியின் அழகு நம் கண்களை கொள்ளை கொள்ளும்.

2) செரோல்சர் ஏரி: serolsar lake

இதையும் படியுங்கள்:
அழகான வளைந்த புருவங்களுக்கு ‘த்ரெட்டிங்’தான் பெஸ்ட்!
ஜிபி...
serolsar lake
serolsar lake

அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் ஏரி. இது கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்தில் கருவேல மரங்கள் மற்றும் சிடார் மரங்களின் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த ஏரி உள்ளூர் மக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படுகிறது. ஏரிக்கு அருகில் புத்தி நாகின் என்ற ஒரு சிறிய கோவிலும் உள்ளது.

3) ஜிபி நீர்வீழ்ச்சி:  jibhi waterfall

இது ஜிபி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அழகிய நீர்வீழ்ச்சியாகும். சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழும் அருவி கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இதன் குளிர்ந்த நீரில் குளித்து சுற்றியுள்ள இயற்கை அழகை ரசிக்கலாம். மலையேற்றம் விரும்புவர்களுக்கு மிகவும் பிரபலமான இடம் இது.

4) சங்கிலி கோத்தி: Chehni Kothi

Chehni Kothi
Chehni Kothi

ஹிமாச்சல கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஐந்து அடுக்கு மரக்கோட்டை உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் மரக்கட்டுமானம் பூகம்பம் மற்றும் பிற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. கோட்டையின் சுவர்களில் இதிகாசங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காட்சிகளை சித்தரிக்கும் வகையில் அழகான சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் நிறைந்துள்ளன.

இவ்வளவு அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த இமாச்சல பிரதேசத்தின் ஜிபி, தாய்லாந்தையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. இந்த அழகான இயற்கை கொஞ்சும் இடத்தை பார்க்க தவறாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com