பலூனில் பறந்துக்கொண்டு இயற்கை அழகை ரசிக்க விருப்பமா? அப்போ உடனே கப்படோக்கியா செல்லுங்கள்!

cappadocia
cappadocia
Published on

கப்படோக்கியா (cappadocia), மத்திய துருக்கியில் உள்ள ஒரு அழகிய பகுதி. இப்பகுதி, தங்கம், காவி, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் கலந்து நெய்யப்பட்ட ஒரு பெரிய கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கிறது. இங்குள்ள மலைகளில் இருந்து வரும் எரிமலைக் குழம்புகளால் (Lava) உருவான பாதைகள் ஏராளம்.

இங்கு காணப்படும் 'பரி குழாய்களால்' (Fairy Chimneys) தான் கப்படோக்கியா உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது. கோபுரம் போல நிற்கும் விசித்திரமான 'பரி குழாய்கள்' நிறைந்த பள்ளத்தாக்குகளும், வரிசையான மரங்களும் இங்கு நிறைய உண்டு.

கப்படோக்கியாவில் இப்படிப்பட்ட பரி குழாய்கள் நிறைய இருக்கின்றன. அதோடு, பாறைகளைக் குடைந்து கட்டிய கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மடங்களும் உள்ளன. பண்டைய காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள், விவசாயிகளும், துறவிகளும் பக்கத்து பக்கத்து வீடுகளில் பாறைகளை குடைந்து வாழ்ந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் எரிமலைச் சாம்பல் குளிர்ந்து போனதால், அது 'டஃபா' (Tufa) என்ற மென்மையான பாறையாக மாறியது. காலப்போக்கில், காற்று மற்றும் நீரால் அரிக்கப்பட்டு, இந்த விசித்திரமான வடிவங்கள் உருவாகின. இந்தப் பாறையை எளிதில் செதுக்கலாம், ஆனால் காற்றில் பட்டவுடன் கடினமாகிவிடும். 1950கள் வரை மக்கள் இந்த பாறைக் குகைகளுக்குள்தான் வாழ்ந்து வந்தனர்.

இன்று, இந்த இடங்கள் துருக்கியின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள். அதிகாலையில் வானில் மிதக்கும் வெப்பக்காற்று பலூன்களில் ஏறி இதன் அழகைப் பார்ப்பது உலகப் புகழ்பெற்ற அனுபவமாகும்.

இதையும் படியுங்கள்:
நடிகையை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்... பங்கமாய் கலாய்த்த நடிகை..!!
cappadocia

ஆனால், இங்குள்ள உள்ளூர் மக்கள், இந்த அழகை நடந்து சென்றோ அல்லது குதிரை சவாரி மூலமாகவோ பார்ப்பதுதான் உண்மையான இன்பம் என்கிறார்கள். கப்படோக்கியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்:

1. Zelve Open-Air Museum

"ஜெல்வ், 6-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்த ஒரு பகுதி," என்று வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். இங்கு பழங்கால வீடுகள், சமையலறைகள், தேவாலயங்கள் மற்றும் பாறைகளில் செதுக்கப்பட்ட துறவிகள் வாழ்ந்த மடங்களின் அறைகளையும் காணலாம்.

2. Ihlara Valley

கோடையில் கப்படோக்கியாவின் பல பகுதிகள் வறண்டு காணப்படும். ஆனால், இஹ்லாரா பள்ளத்தாக்கில் மட்டும் அடர்ந்த பச்சை மரங்களைக் காணலாம். இங்கு வசந்த காலத்தில் செல்வது புது விதமான அனுபவத்தைத் தரும். குயில்களின் இனிமையான சத்தமும், ஓடும் நீரின் ஓசையும் உங்களுக்கு அமைதியையும், நிம்மதியையும் தரும். இங்குள்ள பாறைகளில் செதுக்கப்பட்ட தேவாலயங்களில் பல நூற்றாண்டுகள் பழமையான ஓவியங்கள் உள்ளன.

மேலும் இங்கு கிமு 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பிரம்மாண்டமான செலிம் மடாலயத்தைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
நடிகையை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்... பங்கமாய் கலாய்த்த நடிகை..!!
cappadocia

3. கிஸில்சுகூர் மற்றும் ரோஸ் வேலி

இந்த கிராமத்தில் முஸ்லிம்களும், கிரேக்க கிறிஸ்தவர்களும் கலந்து வாழ்ந்தனர். 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய புனித ஜான் தேவாலயம் இங்கு உள்ளது. வழியில் 'ஊஸ்யூம்லூ கிலிஸ்' (திராட்சைத் தேவாலயம்) போன்ற பழங்கால தேவாலயங்கள் உள்ளன.

துருக்கி சென்றால் கண்டிப்பாக இந்த இடங்களுக்குச் சென்று மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com