தென்னகத்தின் நயாகரா அதிரப்பள்ளி அருவிக்கு ஒரு விசிட்!

அதிரப்பள்ளி அருவி...
அதிரப்பள்ளி அருவி...

கேரளாவில் திரிசூர் மாவட்டம் சாலக்குடியில் அமைந்திருக்கிறது அதிரப்பள்ளி அருவி. இந்த அருவி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகிறது. கேரளாவிலே மிகவும் பெரிய அருவி இந்த அதிரப்பள்ளி அருவியேயாகும். இது 81.5 அடி உயரத்தைக் கொண்டது. அதிரப்பள்ளியிலிருந்து சற்று தொலைவில் சார்பாஅருவி உள்ளது. அதிரப்பள்ளிக்கு வருவோர் இந்த அருவியையும் பார்த்துவிட்டு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரப்பள்ளி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும். இந்த அருவியை சுற்றி பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடம் சுற்றுலாப்பயணிகளை மட்டும் ஈர்க்காமல் நிறைய திரைப்பட இயக்குனர் களையும் தன்னுடைய அழகில் ஈர்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த அருவியை ‘தென்னகத்தின் நயாகரா’ என்று அழைப்பார்கள். வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமானது.

அதிரப்பள்ளி அருவிக்கு சுற்றுலா செல்ல சரியான மாதம்,செப்டம்பர் முதல் ஜனவரியாகும். இந்த நேரத்தில் அருவியில் தண்ணீர் வரப்பு அதிகமாக இருக்கும், இவ்விடத்தை சுற்றி பச்சைப்பசேலென்று காணப்படும் அழகு மதிமயக்குவதாய் இருக்கும். இங்கு வருவதற்கு பெரியவர்களுக்கு ரூபாய் 40, குழந்தைகளுக்கு ரூபாய் 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நிறைய திரைப்படங்களை இந்த இடத்தில் படமாக்கியிருக்கிறார்கள். மலையாளம் மட்டுமில்லாமல் பிற மொழிப்படங்களும் இங்கே எடுக்கப்பட்டுள்ளது. 1986ல் வெளியான தமிழ்ப்படமான புன்னகை மன்னன் இங்கேதான் எடுக்கப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் பிரபலமடைந்த இந்த அருவியை ‘புன்னகை மன்னன் அருவி’ என்றே அழைப்பார்கள். பாகுபலி படத்தில் வரும் காட்சிகளும் இங்கே தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரப்பள்ளி...
அதிரப்பள்ளி...

அதிரப்பள்ளிக்கு சாலக்குடியிலிருந்து சுலபமாக பஸ் அல்லது டாக்ஸியில் சென்றுவிடலாம். அதிரப்பள்ளி தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு நடுவிலே உள்ள அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் பயணிக்க அனுமதியில்லை. சாலக்குடி முதல் அதிரப்பள்ளி செல்லும் பாதைகள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு ரம்மியமாகவும் இருக்கும். மழைக்காலங்களில் இந்தியா முழுவதிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் இந்த அருவியைக் காணவருவார்கள். ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் சுற்றுலாப்பப்பணிகள் அதிரப்பள்ளி மற்றும் வாழச்சல் அருவியை சுற்றிப்பார்க்க வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!
அதிரப்பள்ளி அருவி...

இங்கே தங்குவதற்கு நிறைய தனியார் ரிசாட்கள் (Resorts) உள்ளது. இந்த இடம் அதிகமாக இருசக்கர வாகன சாகச விரும்பிகளையே கவருகிறது. திரிச்சூர் சுற்றுலா கவுன்சில் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து சபாரியை (Safari) அறிமுகப்படுத்தியுள்ளனர். சாலக்குடியிலிருந்து மல்லக்காபரா வரை செல்லும் இந்த சபாரி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

ஒரு அடர்ந்த காட்டிற்குள் பயணித்து பிரம்மாண்டமான அருவியை பார்த்து விட்டு சுற்றியிருக்கும் அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு வருவதற்கான அனுபவத்தை இந்த இடம் நிச்சயமாக கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com