‘பாற்கடல்’ என அழைக்கப்படும் தூத்சாகர் அருவிக்கு (Dudhsagar Falls) ஒரு விசிட்!

தூத்சாகர் அருவி...
தூத்சாகர் அருவி...

ருவிகள் என்றாலே நம் மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அருவியில் இருந்து தெறிக்கும் சாரல் நம் மீது படும் பொழுது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும். அருவியிலிருந்து வரும் தண்ணீர் மேலிருந்து கீழ்விழும் போது, பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இந்தியாவில் எத்தனையோ அருவிகள் இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில அருவிகள் ஏதோ ஒரு விதத்தில் நம் மனதை கவர்ந்திருக்க கூடும். அப்படியொரு அருவியை பற்றித்தான் இன்று காண உள்ளோம். அனைவராலும் ‘பாற்கடல்’ என அழைக்கப்படும் தூத்சாகர் அருவியை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

தூத்சாகர் அருவி கோவாவில் சாங்கியும் மாவட்டத்தில் உள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. இந்த அருவி கோவாவின் தலைநகரான பனாஜியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழும் அருவி நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியாக விழுவது காண்போரை மெய்மறக்க வைக்கக்கூடிய அழகை உடையதாகும்.

‘பாற்கடல்’ என்று அழைக்கப்படும் தூத்சாகர் அருவியானது மண்டோவி ஆற்றிலிருந்து உருவாகிறது. இந்தியாவிலுள்ள உயரமான அருவிகளுள் தூத்சாகரும் ஒன்றாகும். இந்த அருவி 310 மீட்டர் உயரமும் 30 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இது இந்தியாவில் 5ஆவது உயரமான அருவியாக உள்ளது. உலகில் உயர்ந்த அருவிகளின் பட்டியலில் 227ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலங்களில் இந்த அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அருவியின் அடிவாரத்தில் குளிக்கலாம்.

ரயில்கள் ...
ரயில்கள் ...

தூத்சாகர் அருவியை சுற்றுலாப்பயணிகள் வருடம் முழுவதும் சுற்றிப்பார்க்க செல்லலாம். மழைக் காலங்களில் மட்டும் இந்த அருவி முடப்பட்டிருக்கும். அருவியில் நீர்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதே காரணமாகும்.

சாலை வழியாக நேராக தூத்சாகர் அருவியை அடைய முடியாது. கொல்லத்திலிருந்து தூத்சாகர் அருவிக்கு ஜீப் சபாரி மூலமாக பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாகவே செல்ல முடியும். இவ்வழியே செல்லும் இரண்டு ரயில்கள் இங்கே நிறுத்தப்படுகிறது. அமராவதி எக்ஸ்பிரஸில் இருந்து அருவியை காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழியாக ரயில் கடந்து செல்லும் போது, அருவியை காண சில வினாடிகளே கிடைக்குமென்றாலும், அருவியின் பிரம்மாண்டம் நம்மை அதிசயிக்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியம் காப்பதில் பழங்களின் பங்களிப்பு என்ன தெரியுமா?
தூத்சாகர் அருவி...

கேஸ்டில் ராக்கிலிருந்து தூத்சாகர் அருவிக்கான நுழைவு சீட்டின் விலை 400 ரூபாய். தூத்சாகர் அருவியை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான சரியான மாதம் அக்டோபர் முதல் ஜூன் மாதங்களாகும். மலையேற்றம் மற்றும் ஜீப் சபாரி இங்கே மிகவும் பிரபலமாகும்.

மழைக்காலங்களில் கேஸ்டில் ராக் ரயில் நிலையத்திலிருந்து தூத்சாகர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செய்வது மிகவும் பிரபலமாகும். இது 14 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்து கொண்டே செல்வதற்கு மலையேற்றம் செய்து செல்வது தகுதியானதேயாகும்.

தூத்சாகர்அருவியின் அருகில் கடைகள் ஏதும் இல்லாததால் சாப்பாடு, தண்ணீர் எடுத்து செல்வது அவசியமாகும்.

இந்த கோடைக்காலத்தில் குளுகுளுவென்று இருக்க தூத்சாகர் அருவிக்கு ஒருமுறை சுற்றுலாபயணம் சென்று பாற்கடல் அருவியின் அழகை ரசித்துவிட்டு வருவது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com