சொர்க்கமே பூமியில வந்தாச்சு! லோனாவாலா அருகே ஒளிந்திருக்கும் 'ஆம்பி பள்ளத்தாக்கு' ரகசியங்கள்!

வார இறுதி நாட்களை உல்லாசமாகக் கழிக்க மகாராஷ்டிராவில் ஒரு சர்வதேச தரத்திலான சொகுசு மலை நகரம்!
ஆம்பி பள்ளத்தாக்கு|Aamby Valley
ஆம்பி பள்ளத்தாக்குAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

காராஷ்டிராவின் சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆம்பி பள்ளத்தாக்கு (Aamby Valley City), சஹாரா இந்தியா பரிவாரால் உருவாக்கப்பட்ட ஆடம்பரமான மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு மலை நகரமாகும். சுமார்10,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் கூடிய அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

வசதிகள்:

இந்த நகரத்தில் உலகத்தரம் வாய்ந்த தங்குமிடங்கள், சர்வதேச தரத்திலான 18 துளைகள் கொண்ட சாம்பியன்ஷிப் கோல்ஃப் மைதானமும், நவீனமான தண்ணீர் பூங்காவும், தனித்துவமான குழந்தைகளுக்கான பிரிவும், சாகச விளையாட்டுகளுக்கான பிரத்தியேக இடங்களும் உள்ளன. கம்பீரமான மலைகள், செயற்கை ஏரிகள் மற்றும் ஸ்கை டைவிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

ஆம்பி பள்ளத்தாக்கு நகரின் பிரமிப்பூட்டும் செயற்கை ஏரிகள் மற்றும் படகு சவாரி!

ஆம்பி பள்ளத்தாக்கு ஏரி (Aamby Valley Lake):

இங்கு மூன்று பெரிய ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய ஏரியில் படகு சவாரி மற்றும் ஜெட் ஸ்கை(Jet ski) போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

சாகச விரும்பிகளின் சொர்க்கமான ஆம்பி பள்ளத்தாக்கு 19 டிகிரி நார்த்!

19 டிகிரி நார்த் (19 Degree North):

முன்கூட்டியே அனுமதி இல்லாமல் ஆம்பி பள்ளத்தாக்குக்குள் நுழைய முடியாது என்றாலும், இந்த 19 டிகிரி நார்த் சாகச பகுதிக்கு பொதுமக்கள் நேரடியாக கட்டணம் செலுத்தி செல்ல அனுமதி உண்டு. இது ஒரு சாகச பூங்காவாகும். இது பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆம்பி பள்ளத்தாக்கு நகரத்தின் முதன்மையான அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மையமாகும்.

ஆம்பி பள்ளத்தாக்கு|ATV rides
ஆம்பி பள்ளத்தாக்குAI image

இங்கு கரடுமுரடான மலைப்பாங்கான பாதைகள் மற்றும் நீர்நிலைகளைக் கடக்கும் ஏடிவி பைக் சவாரி (ATV rides) தரும் சவாலான அனுபவம் அனுபவிக்க வேண்டிய ஒன்று. சர்பிங் மற்றும் மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் கம்பி வழிப்பயணம் மேற்கொள்ளும் ஜிப்-லைனிங் (Ziplining), ரப்பெல்லிங் மற்றும் ரம்யமான காட்டு சஃபாரி (Jungle Safari) ஆகியவற்றை அனுபவிக்கலாம். த்ரில் தேடுபவர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் சிறந்த இடமாகும்.

ஆம்பி பள்ளத்தாக்கு சர்வதேச கோல்ஃப் மைதானம் மற்றும் டவுன் பிளாசா சிறப்பம்சங்கள்!

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 அடி உயரத்தில் சஹ்யாத்ரி மலைத்தொடரின் இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளுக்கு நடுவே அமைந்துள்ளது. டேவிட் ஹெம்ஸ்டாக்(David Hemstock) என்பவரால் 2005 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது இந்த கோல்ஃப் மைதானம். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள, 256 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த 18 துளைகள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த இந்த கோல்ஃப் மைதானம், விளையாட்டாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
நந்தி ஹில்ஸ் போரடிச்சிருச்சா? பெங்களூரு பக்கத்துல ஒளிஞ்சிருக்கும் இந்த ரகசிய சொர்க்கம் தெரியுமா!
ஆம்பி பள்ளத்தாக்கு|Aamby Valley

டவுன் சதுக்கம் (Town Plaza):

ஐரோப்பிய பாணியிலான கட்டிடக்கலையைக் கொண்ட பகுதி இது. இங்கு ஆடம்பர உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் செய்ய நிறைய கடைகள் உள்ளன.

ஃபவுண்டன் ஆஃப் ஃபார்ச்சூன் (Fountain of Fortune):

வண்ணமயமான விளக்குகள் மற்றும் இசையுடன் கூடிய கண்கவர் நீர்வீழ்ச்சி காட்சி மக்களை வெகுவாக ஈர்க்கும். கண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நீரூற்று காட்சி, மாலை நேரங்களில் கண்களுக்கு விருந்தாக அமையும்.

அருகிலுள்ள முக்கிய பார்வையிட வேண்டிய இடங்கள்:

கோரிகாட் கோட்டை (Korigad Fort):

ஆம்பி பள்ளத்தாக்கின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை, எளிதான மலையற்றத்திற்கு(trekking) மிகவும் பிரபலமானது.

டைகர் பாயிண்ட் (Tiger's Leap) & லயன் பாயிண்ட் (Lion's Point):

லோனாவாலா செல்லும் வழியில் உள்ள இந்த வியூ பாயிண்ட்களில் இருந்து பள்ளத்தாக்குகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகான காட்சிகளை ரசிக்கலாம். இது பள்ளத்தாக்கின் மூடுபனி மற்றும் இயற்கை காட்சிகளை ரசிக்க சிறந்த இடமாகும்.

பவனா ஏரி (Pawna Lake):

ஆம்பி பள்ளத்தாக்கிற்கு மிக அருகில் உள்ள இந்த ஏரிக்கரையில் அமைதியான சூழலில் முகாமிடுதல் மற்றும் படகு சவாரி செய்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

எங்குள்ளது?

புனே மாவட்டத்தில் லோனாவாலாவிருந்து சுமார் 23 கி.மீ. தொலைவிலும், புனேவிலிருந்து 90 கி.மீ. மற்றும் மும்பையிலிருந்து 120 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட்டைக் குறைத்து அழகை ரசிக்கணுமா? உங்களுக்கான காலநிலைக்கு ஏற்ற சுற்றுலா வழிகாட்டி!
ஆம்பி பள்ளத்தாக்கு|Aamby Valley

எப்படிச் செல்வது?

மகாராஷ்டிராவில் உள்ள ஆம்பி பள்ளத்தாக்கு செல்வதற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் லோனாவாலா (Lonavala). அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் புனே ஆகும். போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவு என்பதால் லோனாவாலாவிலிருந்து அல்லது விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி மூலம் ஆம்பி பள்ளத்தாக்கை அடையலாம்.

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், உங்கள் அடுத்த விடுமுறையை ஒரு சாதாரணச் சுற்றுலாவாக மாற்றாமல், சர்வதேச தரத்திலான சொகுசு வசதிகள் மற்றும் அதிரடி சாகசங்கள் நிறைந்த ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக எவ்வாறு திட்டமிடுவது என்ற தெளிவான வழியை நீங்கள் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com