எத்தினபுஜா மலைக்கு ஒரு சாகசப் பயணம் செல்வோமா?

Adventure travel
Ettina Bhuja hills
Published on

த்தினபுஜா (Ettina bhuja) மலை மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு அற்புதமான மலைப்பகுதியாகும். இது சாகசப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான பகுதியாகும். அடர்ந்த வனப் பகுதியும், நீர்வீழ்ச்சிகளும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை பார்ப்பதற்கும் ஏற்ற இயற்கை அழகு கொஞ்சும் இடமாக உள்ளது. இது ஒரு பிரபலமான மற்றும் எளிதான மலையேற்ற இடமாகும். இந்த மலையேற்றப் பாதையின் கடைசி இரண்டு கிலோமீட்டர் மலையேற்றத்தின் மூலம் அதன் உச்சியை அடையமுடியும்.

சிக்மகளூர் (Chikmagalur) மாவட்டத்தில் மூடிகெரெ (mudigere) தாலுக்கா எத்தினபுஜா சிருங்கேரிக்கு அருகே அமைந்துள்ள மலை இது. கடல் மட்டத்திலிருந்து 1,299 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எத்தினபுஜா என்றால் காளை மாட்டின் முதுகு என்று பொருள்.

இந்த மலை சாகச பிரியர்களின் சொர்க்கமாகும். இந்த மலை பார்ப்பதற்கு காளையின் முதுகு போன்று காணப்படுகிறது. நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை இங்கு ட்ரெக்கிங் செய்ய அனுமதி உள்ளது.

சிக்மகளூரு மாவட்டம் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாகும். இங்கு அற்புதமான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த வனப் பகுதிகள், மலைகள் என சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமான எத்தினபுஜா மலை இயற்கை அழகு மிகுந்த இடம். அடர்ந்த வனமும், பனிமூட்டம் நிறைந்த மலைப்பகுதியும், பசுமையான சூழ்நிலையும், வீசும் குளிர்ந்த காற்றும் என சுற்றுலாப் பயணிகளை சொக்க வைக்கும் இடமாக உள்ளது. சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் என உள்ளது. இந்த மலையில் சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்ப்பது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள 5 இடங்களில் சுற்றுலா செல்லலாம்!
Adventure travel

எத்தினபுஜா முடிகெரே மற்றும் சக்லேஷ்பூருக்கு நடுவில் உள்ளது. இது தொடக்க மலையற்றக்காரர்களுக்கு ஏற்ற சிறந்த இடங்களில் ஒன்றாகும். அருகிலுள்ள பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் பன்டஜ்ஜே நீர்வீழ்ச்சி, மகஜஹள்ளி  நீர்வீழ்ச்சி, சிருங்கேரி சாரதா பீடம்

எப்படி செல்வது? 

சிக்மகளூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், மைசூரிலிருந்து 139 கிலோமீட்டர் தொலைவிலும் எத்தினபுஜா மலை அமைந்துள்ளது. அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com