விமானப் பயணம் - பாஸ்போர்ட் மற்றும் விசா!

விமானப் பயணம்
விமானப் பயணம்

விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகள்,  நாட்டுக்கு நாடு வேறுபடும். தனிப்பட்ட விருப்பத்தில் உங்கள் பயணத்தைப் படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் சென்றடையப் போகும் நாட்டில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகளை முன் கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.

*(Embarkation) என்பது நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்காக விமானத்தில் ஏறும் இடமாகும். (Disembarkation) என்பது உங்கள் பயணம் முடிவடைந்து மற்றொரு நாட்டில் நீங்கள் விமானத்தை விட்டு வெளியே வரும் இடமாகும்.

*உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத்தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து குடியேற்ற அனுமதி Emigration clearance  தேவை.

*நீங்கள் விசா உள்ள சரியான பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்கிறீர்களா? என்று உறுதி செய்துகொள்ளவும். உங்களுக்கு ஒரு துணை பாஸ்போர்ட் (Supplementary passport) வழங்கப்பட்டிருந்தால். அதற்கு முந்தைய அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

*இந்திய பாஸ்போர்ட்டுகள் அடர் நீலம்/ கருப்பு உறையுடன் இந்தியாவின் தேசிய சின்னத்தை முகப்பு உறையின் மையத்தில் கொண்டிருக்கும். சின்னத்திற்கு கீழே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் Republic of India என்று பொறிக்கப்பட்டிருக்கும். சாதாரண பாஸ்போர்ட்டுகள் 36 பக்கங்களையும் அடிக்கடி பயணம் செய்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் 60 பக்கங்களையும் கொண்டிருக்கும்.

Emigration clearance
Emigration clearance allianceserv.com

*இந்திய பாஸ்போர்ட்டுகள் அதற்குரிய நபரின் அடையாளத்திற்கான தகவல்கள் பாஸ்போர்ட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க அட்டை முடியும் வரை இருக்கும். இந்தப் பக்கங்களில் உள்ள தகவல்களை மாறுதல்/திருத்தம் செய்ய இயலாத வகையில் இந்தப் பக்கங்கள் மென் தகடினால் உறையிடப்பட்டிருக்கும்.

*உங்களுக்கு பாஸ்போர்ட் இல்லையென்றால், நீங்கள் ஒரு
பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்க விரும்பினால் www.passport.gov.in என்ற தளத்தில் நுழைந்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த பாஸ்போர்ட் அலுவலகத்திலும், மாவட்ட பாஸ்போர்ட் மையத்திலும்/ விரைவு அஞ்சல் மையத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

*விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய பிரமாணப் பத்திரங்கள் (affidavits) மற்றும் இணைப்புகள், பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பத்தின் நிலையை அறியவும், விரைவு பாஸ்போர்ட்டிக்கு (Tatkal Passport) விண்ணப்பிக்கவும் பாஸ்போர்ட்டுகள் அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் இருந்து 3லிருந்து 7 வேலை நாட்களுக்குள் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப் படுகிறது போன்ற விவரங்கள் இணைய தளத்தில் உள்ளன.

*பாஸ்போர்ட் தொலைந்துபோனால் புகார் தெரிவிக்க மற்றும் ஒரு மாற்று (duplicate) பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான விவரமும் இணைய தளத்தில் இருக்கும்.

*விசா என்பது ஒரு நபர் ஒரு நாட்டினுள் நுழைவதற்காக அனுமதி பெற்றிருப்பதை காட்டும் ஒரு அனுமதி ஆவணமாகும். பெரும்பாலும் இது விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டில் பதிக்கப்படும் ஒரு முத்திரையாகவே இருக்கிறது.

*விசாவில் உள்ள பெயரும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒன்றாக இருக்க வேண்டும். அதைப்போலவே பாஸ் போர்ட்டின் எண், பிறந்த தேதி ஆகியவை விசாவுடன் ஒத்திருக்க வேண்டும்.

*விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, விசா செல்லுபடியாகும் காலமும் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருக்குமாறு பார்த்துக்கொள்வது பயணியின் பொறுப்பாகும்.

*ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும் அதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம் மற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து அவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா வழங்கப்படும். விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை சரி பார்த்துக்கொள்வது அனைத்து பயணிகளுடைய கடமையாகும்.

*பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைவதற்காக மற்றொரு நாட்டின் வழியாக செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால், (அமெரிக்காவிற்கு சென்றடைய லண்டனில் இறங்கி மற்றொரு விமானம் மாறிச் செல்வது போன்று) அவ்வாறு செல்வதற்கான டிரான்சிட் விசா பெற வேண்டுமா? என்று அறிந்து கொள்வது அவசியமாகும். டிரான்சிட் விசா பெற வேண்டுமானால் புறப்படுவதற்கு முன்னதாக அதைப் பெற வேண்டும்.

*ஒரு சில நாடுகள் பயணிகள், தங்களுடைய நாட்டின் நகரத்திற்கு வந்ததும் விசாவைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளித்தாலும், (Visa on entry) இந்தியாவைவிட்டு புறப்படும்முன் விசாவைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது.

பயணச்சீட்டு

*ஒவ்வொரு விமான நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர் சேவை திட்டங்களைப் பற்றி அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதை பார்த்து விமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.

*பயணச் சீட்டுகள் முகவர்கள் (travel agents) அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும்கூட பதவி, பயணத் தேதி, சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கின்றதா? என்று சரிபார்த்துக் கொள்ளும் பொறுப்பு பயணிகளுடையதாகும்.

பயணிகள்
பயணிகள்

*பெரும்பாலான விமான நிறுவனங்கள் இணைய தள பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. இந்த பயணச்சீட்டுகள் சாதாரணமாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதமாகவே தோன்றும். இருந்தாலும் அதில் பயணியின் விவரங்கள், விமானத்தின் எண், பயணத்தேதி, புறப்படும் இடம், சென்றடையும் இடம், பயண வகுப்பு, டிக்கெட் வழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம், பேக்கேஜ் அலவன்ஸ் ஆகிய விவரங்கள் இருக்கும்.

*நீங்கள் பயணச்சீட்டை பெற்றவுடன் அதில் உள்ள பி.என்.ஆர். என்ற பயணச் சீட்டு எண், டிக்கெட்டில் உள்ள பெயர், விமான எண், பயணத் தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது, அசல் பயணச்சீட்டு தொலைந்துவிட்டால் நகல் பயணச்சீட்டை பெறுவதற்கு உதவியாக இருக்கும். பி.என்.ஆர். எண்ணை குறிப்பிட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பயணச் சீட்டின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

*பயணச் சீட்டின் நகல் இல்லாமல் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தினுள் செல்ல உரிமை கோர முடியாது.

*விமான நிறுவனத்தினால் அச்சடிக்கப்பட்டு வழங்கப் படும் காகிதம் பயணச் சீட்டு தொலைந்து போய்விட்டால் பயணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்புகாரின் நகலை பயண முகவர் அல்லது விமான நிறுவனத்திடம் கொடுத்து மாற்று பயணச்சீட்டு நகலைப் பெறலாம்.

*ஒருவர் அவருடைய டிக்கெட்டை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு பிரதியை அவருடைய ஈமெயிலுக்குள் அனுப்பி சேமித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்பொழுது பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் அல்லது தன்னுடைய டிக்கெட் விவரங்களை மொபைல் ஃபோனிலும் காட்டலாம். பிரிண்டில் தேவையில்லை என்பதாலும் தேவையில்லாமல் காகிதத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதாலும் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது.

விமானப் பயணம்

*சீட் பெல்ட்டை இணைப்பதற்கு அதில் உள்ள மெட்டல் கிளிப்பை லாக்குகள் நுழைக்கவும். கிளிக் என்ற ஒரு சத்தத்துடன் அது பூட்டிக்கொள்ளும். விமானம் மேலெழும்பும்போது, நிலையற்று இருக்கும்போது, அல்லது தரையிறங்கும்போது சீட் பெல்ட்டை இறுக்கமாக்கிக் கொள்ளவேண்டும். விமானம் மேலெழும்பி நிலையாக பறக்கும் நிலைக்கு வந்தவுடன், நீங்கள் உட்கார்ந்து இருக்கும்போது சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள். ஆனால், வசதிக்காக சற்று தளர்வாக்கிக்கொள்ளலாம்.

விமானப் பயணம்
விமானப் பயணம்

*அனைத்து விமானங்களிலுமே புகைப்பதற்கு அனுமதி கிடையாது. இருந்தாலும், சில பயணிகள் சிகரெட்டை ஒளித்து வைத்துக்கொண்டு வந்து புகைப்பார்கள். ஆக்சிஜன் முகமூடி கீழிறக்கப்பட்டு ஆக்சிஜன் பாய்ந்து கொண்டிருக்கும்போது அனைத்து பயணிகளும் அவர்களிடம் சிகரெட் இருந்தால் அவை அணைக்கப்பட்டு விட்டனவா? என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*உங்களுடைய விமானப் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வைட்டமின் சி-ஐ சாப்பிடவும். உங்களுடைய வீட்டில் உள்ள கிருமிகளைவிட விமானத்தின் உள்ளே இருக்கும். காற்றில் அதிக கிருமிகள் சுற்றிக்கொண்டிருக்கும். உங்களுடைய பயணத்தை உடல்நலமில்லாமல் துன்பகரமானதாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.

*அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட் (ASA) (ஆஸ்பிரின் என்ற பெயரும் இதற்கு உண்டு) மாத்திரையை நீண்ட தொலைவு விமானப் பயணம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னும், விமானப் பயண நாளன்றும் அதன்பிறகு மூன்று நாட்களுக்கும் எடுத்துக்கொள்ளவும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நகராமல் அமர்ந்து இருக்கும்பொழுது கால்களில், ரத்தம் கட்டிக்கொள்ளும். ஏ.எஸ்.ஏ. ரத்தத்தை இளகச் செய்து ரத்தம் கட்டிக்கொள்வதைக் குறைக்கும்.

*கால்களை குறுக்கே கட்டிக்கொண்டு உட்காருவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதில் நீங்கள் எடுத்துச் செல்லும் லக்கேஜ்களின் மேல் உங்கள் கால்களை வைத்து கொஞ்சம் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள்.

*உங்கள் சுவாசபாதைகள் மற்றும் காதுகளை ஒரு ரத்த சேர்க்கை நீக்கும் மருந்தின் (decongestant) விமானப் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சுத்தமாக வைத்துக்கொள்ளவும். இது உங்கள் சைனஸ்கள் மற்றும் காதுகளில் உள்ள மென் படலங்களைச் சுருங்கச் செய்யும்.

*விமானப் பயணத்தின்போது உங்களுடைய காலணிகளை கழற்றுவதைத் தவிர்க்கவும். குறைந்த காற்றழுத்தம் காரணமாக உங்களுடைய பாதங்கள் வீங்கிப்போகலாம். நீங்கள் மறுபடியும் காலணியை போடுவதற்கு முயற்சி செய்யும்போது நீங்கள் அசெளகரியமாக உணரலாம்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி பூண்டு பேஸ்டின் இதர பயன்கள்!
விமானப் பயணம்

*டாய்லட் சீட்டுகள், இருக்கையின் பின்புறங்கள், கை வைத்துக்கொள்ளும் தடுப்புகள், குறிப்பாக ட்ரே டேபிள்கள் ஆகியவற்றில் தொற்றிக்கொள்ளும் கிருமிகள் இருக்கும் என்பதால் இவைகளைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று பயண சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பயணத்தின்போது பயன்படுத்துவதற்காக உங்கள் பையில் கைகளை தூய்மையாக்கும் சானிடைஸர் வைத்துக்கொள்ளுங்கள்.

பயணிகள் கழிவறை
பயணிகள் கழிவறைwww.timesnownews.com

*நோய்வாய்ப்பட்டு நடமாட இயலாமல் இருக்கும் பயணிகள் பயணம் செய்யும்பொழுது. அவர்களுடைய பயணம் வசதியாக இருப்பதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் முன்னரே செய்து அவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும். இந்த பயணிகள் உடல் ஊனமுற்றவர்கள் அல்லது நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய மருத்துவ நிலையில் இருப்பவர்கள் அல்லது விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவி தேவைப்படுபவர்கள் ஆகிய வகையினர்களாக பிரிக்கப்படுவார்கள்.

*நடமாட இயலாத பயணிகள் கழிவறை மற்றும் இருக்கை வரிசையில் முதல் இருக்கையிலும் வசதியாக அமர வைக்கப்படுவர். கமான்டர் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு நடமாட இயலாத, இந்தப் பயணிகளுக்கு விமானத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ குறிப்புகள் உள்பட்ட அனைத்து விவரங்களும் அளிக்கப்படும்.

நன்றி : மங்கையர் மலர்*

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com