கண்கவர் படகு வீடுகள், வரலாற்று கோயில்கள்: ஆலப்புழாவின் அழகு ரகசியங்கள்!

Alappuzha tourist places
The beauty of Alappuzha

கேரளாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழா என்றழைக்கப்படும் ஆலப்புழா மரகத பச்சை சொர்க்கம் ஆகும். மயக்கும் வயல்கள், பனை மரங்கள் நிறைந்த ஏரிகள் பசுமையான நெல் வயல்களின் அழகிய நிலங்களுக்கு  பெயர் பெற்றது. கால்வாய்கள் மற்றும் தடாகங்களின் அமைப்பு இரவு தங்கும் வசதிகளை வழங்கும். வசீகரிக்கும் படகு வீடுகளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

1. ஆலப்புழா கடற்கரை

Alappuzha tourist places
ஆலப்புழா கடற்கரை

ஆலப்புழா கடற்கரை என்று அழைக்கப்படும் ஆலப்புழா கடற்கரை இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள ஒரு அழகான கடற்கரை  ஆகும். இந்த கடற்கரை அதன் தங்க மணல் சூரிய அஸ்தமனம் அரபிக்கடலில் கம்பீரமாக மீறி சொல்லும் 150 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கப்பல் துறை  ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இது ஆலப்புழாவிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. கிருஷ்ணன் கோயில்

Alappuzha tourist places
கிருஷ்ணன் கோயில்

ஆலப்புழாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ கிருஷ்ணா கோவில். கிருஷ்ணர் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைதியான சரணாலயம் 15 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை இல்லாமல் அந்த கட்டிடக்கலை பாரம்பரிய கேரளப் பாணி வடிவமைப்பை காட்டுகிறது. கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக இது உள்ளது. அமைதியான சூழ்நிலையில் இந்த கோயில் அமைதியான அனுபவத்தை அளிக்கும். இங்கு தரும் 'பால் பாயாசம்' என்று அழைக்கப்படும் இனிப்பு பால் கஞ்சிக்கும் பெயர் பெற்றது.

இதையும் படியுங்கள்:
SuperShe தீவு: ஆண்களுக்கு No Entry! இது நல்லா இருக்கே!
Alappuzha tourist places

3. படகு இல்லம்

Alappuzha tourist places
படகு இல்லம்

உப்பங்கழிகளின் மாயாஜாலத்தை உண்மையிலேயே அனுபவிக்க இந்த படகு இல்லப் பயண சுற்றுலாவை மேற்கொள்ளுங்கள். அசையும் பனை மரங்கள், மீனவர்கள் வலைகளை வீசி மீன் பிடிப்பதையும், கிராமப்புறங்களால் சூழப்பட்ட அமைதியான நீரில்  படகு மிதந்து செல்வதை பார்க்க வியப்பில்கண்கள் விரிவடையும்.

4. கிருஷ்ணாபுரம் அரண்மனை

Alappuzha tourist places
கிருஷ்ணாபுரம் அரண்மனை

ஆலப்புழாவிலிருந்து சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காயங்குளத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அற்புதம். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது பாரம்பரிய கேரளா கட்டிடக்கலையை காட்சிப் படுத்துகிறது. மற்றும் கஜேந்திர மோட்சத்தை சித்தரிக்கும் கேரளாவின் மிகப்பெரிய சுவர் ஓவியம் உள்ளது. அரண்மனையின் அரச படுக்கையறைகள், நடன மண்டபம் மற்றும் பழங்கால கலைப்பொருட்களின் காட்சிகளை காணலாம்.

இதனைப் பார்வையிட காயங்குளத்திலிருந்து கார் பயணம் செய்து சென்று பார்க்கலாம்.

5. கலங்கரை விளக்கம்

Alappuzha tourist places
கலங்கரை விளக்கம்

ஆலப்புழா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த கலங்கரை விளக்கம். இது ஒரு தனித்துவமான காட்சியையும் சிறந்த புகைப்படம் எடுக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இதன் மேல் இருந்து நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பிறந்த காட்சிகளை பார்வையாளர்கள் அங்கிருந்து காணலாம் பார்வையாளர்கள் கலங்கரை விளக்கத்தில் ஏறி அரபிக்கடலின் அழகு காட்சிகளையும், நகர காட்சிகளையும் பார்த்து அனுபவிக்கலாம்.

6. நேரு கோப்பை படகு போட்டி

Alappuzha tourist places
நேரு கோப்பை படகு போட்டி

ஆலப்புழாவுக்கு சென்றால் புகழ்பெற்ற நேரு கோப்பை படகு பந்தயத்தை பார்க்க தவறாதீர்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இது நடக்கும். இந்த உப்பங்கழிகளில் நீண்ட பாம்புப் படகுகள் ஒன்றுக் கொன்று போட்டியிடும் ஒரு சிலிப்பூட்டும் போட்டி பார்ப்பது சிலிர்ப்பான நிகழ்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com