மேல் நோக்கிச் செல்லும் அதிசய அருவிகள்!

மேல்நோக்கு அருவி...
மேல்நோக்கு அருவி...

-கமலா முரளி

ருவிகள் என்றால் மலைகளில் மேல் முகடுகளிலிருந்து, நீர் ஆரவாரத்துடன் பிரவாகமாக கீழ் நோக்கி பாய்ந்து வரும் ஒரு இயற்கை பேரெழில் என நாம் அறிவோம்.

மலைகளின் சரிவுகளில் அருவியின் ஓட்டம் வெள்ளிக்கீற்றாய் , ஓவியங்களில் பார்க்கும் போதே மிக ரம்மியமாக மனதைக் கவரும்.

மலைமுகடுகளில் அருவி பெருக்கெடுத்து ஓடுவதைக் காண்பது மிகவும் அற்புதமாக இருக்கும்.

சுற்றுலாத் தலங்களில் அருவியை காண்பதற்கான குறிப்பிட்ட இடங்களை (view points) தெரிவு செய்து வைத்திருப்பார்கள்.

அருவியை நோக்கி செல்ல செல்ல, அருவியின் இரைச்சல் சற்று தொலைவிலேயே கேட்கும்.

சில அருவிகள் குறைந்த உயரத்தில் இருந்து பூமி நோக்கி விழும்.

சுற்றுலா பயணிகள் மிக அருகில் சென்று பார்வையிடவும், அருவியில் நீராடவும் ஏற்பாடுகள் இருக்கும்.

சில அருவிகள் மிக அதிக உயரத்தில் இருந்து விழும். பார்வையிட மட்டுமே அனுமதியும் வசதியும் இருக்கும்.

மேலிருந்து புறப்படும் அருவி, கீழே விழாமல் , மேலேயே திரும்பும் அதிசய அருவிகள் பற்றித் தெரியுமா ?

ஆம், சில சமயங்களில் , வளிக்காற்றின் விளைவால் அருவியின் நீர் கீழே விழும் முன்பே மேல் நோக்கி வீசப்படும். இதனை " தலைகீழ் அருவி" (reverse falls) என்று சொல்லுவர்.

மதி மயக்கும் , திகைக்க வைக்கும் இத்தகைய இயற்கை அதிசயத்தை, ஹவாய், பாலி ஹே வே, ஓஹா நீர்வீழ்ச்சிகளில், வேபுஹியா (Waipuhia) அருவியில் காணலாம்.

அருவி, உண்மையிலேயே, மேல் நோக்கிப் பாயவில்லை. காற்றின் விசையாலும், திசையாலும் நிலைகுலைந்து, பூமியை அடையாமல் மேல் வாட்டாமாய் சிதறும் காட்சிப்பிழை  தோற்றம்தான் இது என்று சொன்னாலும், மிக அற்புதமான காட்சியாகும்.

இத்தகைய மேல்நோக்கு அருவித் தோற்றம் தற்காலிகத் தன்மை உடையது என்றாலும் உலகின் சில இடங்களில், அதாவது வளியின் விசை திசை மாற்றங்களை அவ்வப்போது சந்திக்கும் மலைமுகடுகளில், அடிக்கடி காணமுடியும்.

மேல்நோக்கு அருவி...
மேல்நோக்கு அருவி...

அயர்லாந்தில் உள்ள மோஹர் பாறை முகடு, மஹாராஷ்ட்ராவில் நானேகாட் குன்று பகுதி, ஹவாய், வேபுஹியா நீர்வீழ்ச்சி, ஐஸ்லாந்து யூகண்டி நீர்வீழ்ச்சி, ஜப்பான் ஃபுர்பே அருவி, நம் பெல்காம் அருகே அம்போலி நீர்வீழ்ச்சி, இங்கிலாந்தி கிண்டர் நீர்வீழ்ச்சி,பிரேஸில் ஸ்மோக் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களில் மேல்நோக்கு அருவிகள் காணக் கிடைக்கின்றன.

உலகில் வேறு சில இடங்களிலும் மேல் நோக்கி சீறும் அருவித் தோற்றம் , மழை மற்றும் காற்று பலமாக அடிக்கும் தருணங்களில் ஏற்படுகிறது.

ஆஸ்திரேலியா , சிட்னி அருகே (Peak District, Kinder Fall) கின்டர் அருவியில் கடந்த பிப்ரவரி 2020 மாதம், இத்தகைய இயற்கை அற்புதம் நிகழ்ந்தது செய்திகளில் வந்தது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!
மேல்நோக்கு அருவி...

இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலத்தில், சஹ்யாத்ரி மலைகளில் அமைந்துள்ள அம்போலி என்ற இடத்தில், அமைந்திருக்கும் அம்போலி அருவியிலும், இது போன்று, "அருவி மேல் நோக்கு" அவ்வப்போது நிகழ்கிறது. இங்கே, 2018 ஆம் ஆண்டில் கெவல்சத் பாயின்ட் என்ற இடத்தில் இருந்து இந்த அதிசய நிகழ்வுதனை நிழற்படம் எடுத்து உள்ளனர்.

"மேல் நோக்கு" அருவி  காணொளி காட்சிகள் நிறைய இருக்கின்றன.

நமது சுற்றுலா பயணங்களில், இத்தகைய தனித்துவமான இடங்களைச் சென்று பார்க்கலாம். அத்தகைய வாய்ப்பு இல்லாதோர், நேரிடையாக பார்க்கவில்லை என்றாலும் காணொளியில் ஆவது காணலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com