புளோரிடா (அமெரிக்கா) பயணக்கதை - 3 : அமெரிக்காவின் தெற்கு முனை- கீ வெஸ்ட் தீவு!

மியாமி பீச், கீ வெஸ்ட் தீவு மற்றும் உல்லாசக் கப்பல் அனுபவங்களின் முழுமையான புளோரிடா பயணத் தொகுப்பு!
Florida Travel - Key West Island
Florida Travel - Key West Island
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கீ வெஸ்ட் தீவு மியாமிலிருந்து சுமார் மூன்றரை மணி நேர டிரைவ் தூரத்தில் உள்ளது. இதுதான் வட அமெரிக்கக் கண்டத்தின் தெற்கு முனை. ஏறக்குறைய ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, இரு பக்கமும் கடல் சூழ, நீண்ட சாலையில் நம் பயணம் தொடர்கிறது. ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான பல தீவுகளைக் கடந்து, பல பாலங்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலை நாடுகளில் நேர்த்தியான சாலைகளை எங்கும் போட்டு, அவற்றைச் சரியாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். மேலும்,சாலை விதிகளை அனைவரும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்கள். நம் நாட்டில், விதிகளை மீறுவதே ஹீரோயிஸம் என்ற மனப் பாங்கு எப்படியோ வளர்ந்து, அதுவே பல விபரீதங்களுக்கு வழிவகுத்து விடுகிறது!

வழி நெடுகிலும் உள்ள தீவுகளில், யாட் (Yacht) என்ற மீன்பிடி மெஷின் படகுகளே அதிகம் காணப்படுகின்றன. காருக்குப் பின்னால் பிணைத்து அவற்றை இழுத்துச் செல்வதும், கார் பார்க்கிங் போல் பல அடுக்கு பார்க்கிங்கில் அவற்றைப் பார்ப்பதும் நமக்குப் புதுமையாகவே தோன்றுகிறது. சில இடங்களில் சாலையின் இரு புறத்திலும் நீலக் கடல் பரவிக்கிடப்பது மனதை லேசாக்குகிறது. நீரால் உடலை மட்டுமல்ல; உள்ளத்தையும் குளிர்விக்க முடிகிறது. இவற்றையெல்லாம் சேர்த்துத்தானோ சாக்ரடீஸ் ‘உன்னையே நீ அறிவாய்’ என்று சொன்னார்! நமது நாலடியாரோ ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்கிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com