புளோரிடா (அமெரிக்கா) பயணக்கதை - 4 : படகு சவாரியும் பாராசூட் பயணமும்!

மியாமி பீச், கீ வெஸ்ட் தீவு மற்றும் உல்லாசக் கப்பல் அனுபவங்களின் முழுமையான புளோரிடா பயணத் தொகுப்பு!
புளோரிடா பயணம்-Florida Travel-Parachute
புளோரிடா பயணம்-Florida Travel-Parachute
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கீ வெஸ்ட் பீச் அன்று காலை அமைதியாக இருந்தது. அதிக அலைகள் இன்றி, ‘வெயிலுக்கு இதமாக என்னுள் வந்து குளிங்களேன்’ என்று கூப்பிடுவது போலிருந்தது.

சிறிய பீச் என்றாலும், அதிக ஆழமும், அலைக்கழிக்கும் அலைகளும் இல்லை என்றாலே நமக்குச் சந்தோஷந்தானே!அருகிலேயே ரெஸ்ட் ரூமும், அங்கேயே உடை மாற்றிக் கொள்ள ஏதுவான சூழலும் உள்ளது. குடி நீருக்கான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார்கள்.

குளிக்கும் இடத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் அடையாள போஸ்ட் வைத்திருக்கிறார்கள். அதைத்தாண்டிப் போகாமல் இருப்பது நல்லது. அந்த நூறு மீட்டர் தூரமும் கழுத்தளவு ஆழமே உள்ளதால், குழந்தைகளுங்கூடப் பயமின்றிக் குளிக்கும் பீச்சாக இது உள்ளது. வருகின்ற அனைவருமே மணிக் கணக்கில் கடல் நீரில் நீச்சலடிப்பதும், நடுநடுவே கரையிலேறி நாற்காலியில் படுத்து வெயில் குளியலைஅனுபவிப்பதுமாகப் பொழுதை இனிமையாகப் போக்குகிறார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com