அட சுற்றுலாவில் இத்தனை வகைகள் இருக்கா?

Types of Tourism
Types of Tourism
Published on

சுற்றுலா என்றதும் பலரது விருப்பமாக இருப்பது குளிர்ச்சியாக இருக்கும் மலைப்பிரதேசங்கள் தான். சிலருக்கு நீர்வீழ்ச்சி பிடிக்கும்; சிலருக்கு கோயில்கள் பிடிக்கும்; சிலருக்கு காடுகள் பிடிக்கும். இப்படி நாம் செல்லும் இடத்தைப் பொறுத்து சுற்றுலாவின் பல்வேறு வகைகளை விளக்குகிறது இந்தப் பதிவு.

விடுமுறை நாட்களில் சுற்றுலாவிற்கு செல்வது அனைவருக்கும் பிடிக்குமல்லவா! சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்களுக்கு எங்கு செல்லலாம் என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். ஏனெனில் சுற்றிப் பார்க்க எண்ணற்ற இடங்கள் உள்ளன. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தைச் சொல்ல முடிவில் ஏதாவது ஒரு இடத்தைத் தேர்வு செய்து சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாம் செல்லும் இடத்தைப் பொறுத்து சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஆம், பலரும் இதனைத் தெரிந்து கொள்ளமாலேயே சுற்றுலாவிற்கு சென்று வருகின்றனர்.

ஆன்மீகச் சுற்றுலா:

கோயில்கள் மற்றும் புனித தலங்களை விரும்புபவர்கள் குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா சென்று, பல கோயில்களை கண்டு ரசிக்கலாம். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உடன் வந்தால், அவர்களுக்குத் தேவையானவற்றை முன்பே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

இயற்கை சுற்றுலா:

தாவரவியல் பூங்கா, பறவைகள் சரணாலயம், காடுகள் மற்றும் ட்ரெக்கிங் செல்வது போன்றவை இயற்கை சுற்றுலாவில் அடங்கும்‌. இந்தச் சுற்றுலாவிற்கு செல்பவர்கள் அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும் என்பதால் அதற்கேற்ப உடல்நலத்துடன் இருப்பவர்கள் செல்வது நல்லது.

வரலாற்றுச் சுற்றுலா:

மன்னர்கள் வாழ்ந்த இடங்கள், வரலாற்றுப் பொக்கிஷங்கள், புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களுக்குச் செல்வது வரலாற்றுச் சுற்றுலாவாகும். வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்தவர்கள் இந்தச் சுற்றுலாவைத் தேர்வு செய்யலாம்.

அனுபவச் சுற்றுலா:

எகிப்து பிரமிடு, அண்டார்டிகா மற்றும் சஹாரா பாலைவனம் போன்ற தொலைதூரங்களுக்குச் சென்று அங்கு நிலவும் காலநிலையை எதிர்கொள்வது அனுபவச் சுற்றுலா.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா தருவது என்ன ?
Types of Tourism

பசுமைச் சுற்றுலா:

பழம்பெருமை வாய்ந்த கிராமங்கள், விவசாயப் பண்ணைகள் மற்றும் மூத்த விவசாயிகளைச் சந்தித்து உரையாடுவது பசுமைச் சுற்றுலாவில் அடங்கும். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே விவசாயத்தின் அவசியத்தைச் சொல்லித் தர பசுமைச் சுற்றுலா செல்வது நல்ல பலனைத் தரும்.

சாகச சுற்றுலா:

இன்றைய இளைஞர்கள் பலரும் படகு ஓட்டுவது, ஆழ்கடலுக்குள் செல்வது, சாலையில் வாகனம் ஓட்டும் பந்தயம் மற்றும் மலை விளிம்பில் இருந்து பாரா கிளைடிங் செய்வது போன்ற சாகச சுற்றுலாவை விரும்புகின்றனர்.

கடற்கரைச் சுற்றுலா:

கடற்கரையில் பரிசல் சவாரி மற்றும் படகு சவாரி போன்றவற்றை மேற்கொள்ள செல்வது கடற்கரைச் சுற்றுலா. நீச்சல் தெரியாதவர்கள் இந்தச் சுற்றுலாவிற்கு செல்வதைத் தவிர்க்கலாம்‌.

மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்றுலா:

மாற்றுத் திறனாளிகளும் மற்ற மனிதர்கள்னைப் போலவே சுற்றுலா செல்ல ஆசைப்படுவதுண்டு. ஆனால், இவர்கள் தனியாக செல்வது நல்லதல்ல. இவர்களுக்கு ஏற்ற வசதிகள் இருக்கும் இடத்தை தேர்வு செய்து குடும்பத்துடன் செல்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com