சுற்றுலா போறீங்களா?அவசியம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்!

Are you going on a trip?
tourist awarness
Published on

யணம் என்பது நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு வாழ்க்கைக் கண்ணாடி. வாய்ப்பு கிடைக்கும் போது தவறாமல் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் மனதையும் வாழ்வையும் மேம்படுத்தும். பயணத்திற்காக நாம் செலவழிக்கும் தொகை ஒரு செலவு அல்ல. அது நம் வாழ்வை மேம்படுத்தும் ஒரு சிறப்பான முதலீடு என்றே கருத வேண்டும். பயணம் மேற்கொள்ளும்போது உடன் தவறாமல் கொண்டு செல்ல சாதனங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காமிரா : நமது பயணத்தைப் பதிவு செய்ய ஒரு நல்ல தரமான காமிராவைக் கொண்டு செல்லுங்கள். தற்போது கைப்பேசியிலேயே படங்களையும் காட்சிகளையும் பதிவு செய்ய முடிகிறது. ஆனால் தரமான காமிராவில் பல வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாக பதிவு செய்ய இயலும்.

செல்பி ஸ்டிக் : தற்காலத்தில் செல்பி என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. நல்ல தரமான ஒரு செல்பி ஸ்டிக்கை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். குடும்பத்தினரோடு சுற்றுலாத் தலங்களை நன்றாக படம் பிடிக்க இது உதவும். செல்பி எடுக்கும் போது மிக கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டியது உங்கள் கடமை என்பதை மறக்காதீர்கள்.

பவர் பேங்க் : மொபைல் போனை சார்ஜ் செய்யப் பயன்படும் ஒரு கருவி பவர் பேங்க். பயணத்தின் போது அதிக அளவில் மொபைலை உபயோகிப்பதன் காரணமாக பேட்டரியின் சக்தி சீக்கிரம் தீர்ந்து விடும். நீங்கள் தங்கும் விடுதியில் மின்சாரம் தடைபடலாம். அப்போது பவர் பேங்க் மூலம் உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். பயணத்தின் போதும் பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏடிஎம் அட்டை : சுற்றுலாவின்போது பணத்தை அதிக அளவில் கொண்டு செல்லாதீர்கள். கூடுமானவரை ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துங்கள். அல்லது கைபேசியின் மூலம் பணத்தைச் செலுத்துங்கள்.

டிராலி பேக் : விமானப் பயணங்களின் போது டிராலி பேகைக் கொண்டு செல்லுங்கள். அதிக அளவில் இதில் துணிகள் மற்றும் பிற பொருட்களை வைத்துக் கொண்டு செல்லலாம்.

டிராவல் பேக் : சிறிய டிராவல் பேகைப் பயன் படுத்துங்கள். இதை பேருந்து மற்றும் ரயிலில் கொண்டு செல்வது சிரமம்.

முதலுதவிப் பெட்டி : உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தலைவலி, ஜீரம், வயிற்றுவலி, வாந்தி மற்றும் பேதி, நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் மாத்திரைகள் முதலானவற்றைக் கொண்டு செல்லுங்கள்.

பிளாஸ்க் : சிறிய அளவிலான தரமான பிளாஸ்க் ஒன்றை உடன் கொண்டு செல்லுங்கள். குளிர்பிரதேசங்களுக்குச் செல்லும் போது தேநீர் அல்லது சுடுநீரை நிரப்பிப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு உதவும் உலகின் சிறந்த கேள்விகள்!
Are you going on a trip?

தலையணை : காற்றினால் ஊதிப் பயன்படுத்தக் கூடிய இரண்டு அல்லது மூன்று தலையணைகளை (Air Pillows) உடன் எடுத்துச் செல்லுங்கள். இது உங்களுக்குப் பெரிதும் உதவக் கூடும்.

டார்ச் லைட் : ஒரு சிறிய பென் டார்ச் லைட்டை தவறாமல் கொண்டு செல்லுங்கள். இது பல சமயங்களில் பெரிதும் உதவும் ஒரு உபகரணமாக்கும்.

யுனிவர்சல் பவர் அடாப்டர் : வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்த அடாப்டரை தவறாமல் கொண்டு செல்லுங்கள். பல நாடுகளில் பலவகையான மின்சார முறை வழக்கத்தில் உள்ளது. இத்தகைய அடாப்டர்களைக் கொண்டு சார்ஜிங் செய்தல் முதலானவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்ளலாம்.

குடை : சிறிய குடை ஒன்றை உடன் எடுத்துச் செல்லுங்கள். வெளியே செல்லும் போது மழை பெய்தால் பயன்படக்கூடும்

எடை போடும் கருவி : வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உங்கள் லக்கேஜ்களை எடை போட்டுக் கொண்டு செல்லுவதும் கொண்டு வருவரும் அவசியம். தற்போது நானூறு ரூபாய் விலையில் கையடக்கமாக ஐம்பது கிலோ வரை நிறுக்கக்கூடிய கருவிகள் கிடைக்கின்றன. ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com