இராஜஸ்தானின் தலைநகரான ஜெய்பூர் உலக அளவிலான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. வருடா வருடம், பல்லாயிரக்காண மக்கள் சுற்றுலாவிற்கு ஜெய்பூர் வருகின்றனர். ஜெய்பூரில் காண்பதற்கு முக்கியமான 10 இடங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது ஆம்பர் அல்லது ஆமர் கோட்டை என்றழைக்கப் படுகிறது. இது ஆரவல்லி மலைத் தொடரிலுள்ளது. இது ராஜா மான்சிங் அவர்களால் கி.பி 1592 இல் கட்டப்பட்டது. இது ஜெய்பூரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ளது. இதில் அரண்மனையும் உள்ளடங்கியிருப்பதால், ஆம்பர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. இது மாவோட்டா ஏரியை நோக்கியுள்ளது. ஏரியின் மீது அழகான தோட்டமும் உள்ளது. இது மொகலாயர்கள் மற்றும் இராஜபுத்திரர்களின் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. இது நான்கு அடுக்குகளைக் கொண்டது. இதில் அரசர் மக்களைச் சந்திக்கும் திவான் இ ஆம், அரசருடைய தனிப்பட்ட சந்திப்புகளை நிகழ்த்தும் திவான் இ காஸ் போன்ற இடங்களும், மற்றும் அரண்மனை போன்ற பல்வேறு அம்சங்களுமுள்ளன. இது மணற்பாறைகளாலும், சலவைக் கற்களாலும் கட்டடப்பட்டுள்ளது.
இது ஆம்பர் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது. இது ஆம்பர் கோட்டையுடன் சுரங்கப் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கி.பி. 1799 இல் மகாராஜா சவாய் பிரதாப் சிங் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு உலகின் நகரக் கூடிய பீரங்கிகளில் மிகப் பெரியவைகளில் ஒன்றான ஜெய்வானா பீரங்கி உள்ளது. ஜெய்வானா பீரங்கி இந்தக் கோட்டையிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆம்பர் கோட்டையை விடவும் சற்று உயரமான இடத்திலுள்ளது. இதுவும் மாவோட்டா ஏரியை நோக்கியமைந்துள்ளது. இது ஜெய்கர்க் அதாவது வெற்றிக் கோட்டை என்றழைக்கப்படுகிறது.
இது ஆம்பர் கோட்டைக்கு சற்று அருகே அமைந்துள்ளது. முன் குறிப்பிட்ட இரண்டுக் கோட்டைகளுடன் சேர்ந்து, ஜெய்பூருக்கு பலமான பாதுகாப்பை வழங்கியது. கி.பி. 1734 இல் மகாராஜா சவாய் ஜெய்சிங் || அவர்களால் கட்டப்பட்டது. இது இளைபாறுவதற்காக கட்டப்பட்டது. முதலாம் இந்திய சுதந்திரப் போரின்போது, ஆங்கிலேய குடும்பத்தினரைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டது. நகர்கர்க் கோட்டையில் பல அரண்மனைகள் உள்ளன. அதில் மாதவேந்திர பவன் என்கிற அரண்மனை பிரபலமானது. அதிலுள்ள சுவரோவியங்கள் பிரபலமானவை.
இராஜஸ்தானின் பழம்பெரும் அருங்காட்சியகம். இந்தோ- சார்சனிக் கட்டடக்கலையின் அருமையானதொரு உதாரணமாக உள்ளது. இது கி.பி 1887 இல் மக்களுக்கான அருங்காட்சியகமாக அர்ப்பணிக்கப்பட்டது. டோமாஸ் ஹெச். ஹெண்ட்லி அவர்களால் இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
கி.பி. 1883 இல் ஜெய்பூரில் நடந்த மிகப்பெரிய கண்காட்சிக்காக சேகரிக்கப்பட்டு, பின்னர் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுக் காலங்களைச் சேர்ந்த ஓவியங்கள், யானை தந்தப் பொருட்கள், கம்பளங்கள், கற்சிற்பங்கள் போன்ற பல அரியப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
கி.பி. 1988 ஆம் ஆண்டு பி.எம். பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது முழுக்க முழுக்க வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோவில். இந்தக் கோவிலுக்கான நிலம் ராஜகுடும்பத்தினரால் ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. இங்கு லக்ஷ்மி மற்றும் நாராயணருக்கு சன்னதிகள் உள்ளன. மற்ற இந்துக் கடவுள்களுக்கும் சன்னதிகள் உள்ளன.
இது மான்சாகர் ஏரி என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியின் நடுவிலுள்ளது. இந்த அரண்மனை கி.பி. 1699 இல் கட்டப்பட்டது. இதன் பிம்பம் ஏரியில் விழுவது கண்களுக்கு விருந்தாக இருக்கும். இது மூன்று அடுக்குகளைக் கொண்டது. இது மணற்பாறைகளால் கட்டப்பட்டது.
ஜெய்பூரினை உருவாக்கிய மகாராஜா சவாய் ஜெய்சிங் அவர்களால் கட்டப்பட்டது. இது வாஸ்து சாஸ்திர அமைப்பில் உருவாக்கப்பட்டது. இது இராஜபுத்திர, மொகலாய மற்றும் ஐரோப்பிய கட்டடக்கலையின் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது முபாரக் மஹால், சந்திர மஹால், மகாராணி அரண்மனை, மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகம் போன்ற பல்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது.
திறந்தவெளி கோளரங்கம். இது இந்தியாவிலுள்ள ஜந்தர் மந்தர்களில் மிகப்பெரியது. இதில் உலகின் மிகப்பெரிய சூரிய கடிகாரம் மற்றும் பல்வேறு வானப் பொருட்கள் அளவீடு சார்ந்த பல்வேறு இயந்திரங்கள் உள்ளன. இது கி.பி. 1734 இல் கட்டப்பட்டது.
இது தேனடையைப் போன்ற வடிவத்திலுள்ளது. இது கி.பி. 1799 இல் மகாராஜா சவாய் பிரதாப் சிங் அவர்களால் கட்டப்பட்டது. இது நகர அரண்மனையின் ஒரு அங்கமாகவுள்ளது. நகர விழாக்கள், அன்றாட வாழ்க்கையை அரண்மனைப் பெண்கள் காண்பதற்காக கட்டப்பட்டது. இதில் 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன. ஒவ்வொரு ஜன்னலிலும் நுணுக்கமான பின்னல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிங்க் நகரத்தில் அமைந்துள்ளது. பிங்க் நகரத்தில் கட்டடங்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் அதாவது பிங்க் நிறத்திலிருக்கும். இங்குள்ள பாபு பஜாரில் இராஜஸ்தானின் பல்வேறு கைவினைப் பொருட்கள், உடைகள் போன்ற பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.
இவை தவிர கோலே கி ஹனுமான்ஜி மந்திர் (கோலேவின் அனுமார் கோவில்), சோகிதனி (இராஜஸ்தான் கலாச்சாரம் சார்ந்த மகிழ்ச்சிப் பூங்கா), ஸீஷ் மஹால்(கண்ணாடி அரண்மனை), சிஸோடியா ராணி கி பாக்(சிஸோடியா ராணியின் தோட்டம்) என பல்வேறு அருமையான இடங்கள் உள்ளன.
ராஜஸ்தான் ஜெய்பூருக்குச் செல்ல நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்கள் சிறப்பானவை. அப்போது வெயில் குறைவாக இருக்கும். காலையில் சற்றுக் குளிராக இருந்தாலும், சற்று நேரத்தில் வெயில் வந்தவுடன் தட்பவெட்பம் நமக்கு ஏதுவாக இருக்கும்.
ஜெய்பூர் செல்ல தயாராகி விட்டீர்களா?