பாவங்களுக்கு பரிகாரம்: ஆறுதல் தேடும் புனிதப் பயணம்!

Payanam articles
Atonement for sins
Published on

யணம் செய்ய யாருக்குதான் பிடிக்காது. பயணம் என்றாலே குதூகலம்தான். சாகசப் பயணம், வணிகப் பயணம், கல்வி பயணம், கலாச்சாரப் பயணம், குழுப் பயணம், தனிநபர் பயணம் மற்றும் ஆன்மீகப் பயணம் என பயணங்களில் பல வகைகள் உள்ளன. புனித தலங்களுக்கு செல்வது போன்ற மத அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் பயணம்தான் சேத்ராடனம் என்பது.

இந்த ஆன்மீகப் பயணத்தில் யாத்ரீகர்கள் புனிதமான இடங்களுக்கு செல்வதற்கும், நம்பிக்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் இந்த யாத்திரையை மேற்கொள்கின்றனர். இது பக்தியை வெளிப்படுத்தவும், மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

ஆன்மீகப் பயணம் பெரும்பாலும் முதியவர்கள் எல்லா கடமைகளையும் முடித்த பின்பு காசி முதல் ராமேஸ்வரம் வரை பயணப்படுவார்கள். இன்றைய காலத்தில் இளைஞர்கள் கூட இப்படிப்பட்ட ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கின்றனர். 10, 15 நாட்கள் தொடங்கி, மாதக்கணக்கில் பயணம் செய்பவர்களும் உண்டு. பெரும்பாலும் இப்படி பயணம் செய்பவர்கள் பட்ஜெட் பயணம்தான் மேற்கொள்வார்கள்.

எளிமையான விடுதி, உணவு என எடுத்துக் கொண்டு பயணத்தை மேற்கொள்வார்கள். இந்த வகைப் பயணங்கள் அந்த ஊர் கலாச்சாரங்கள் குறித்து அறிந்து கொள்ள பெரிதும் உதவும். சிலர் இந்த ஆன்மீக நீண்ட காலப் பயணத்தை உலக அமைதிவேண்டி செய்வது வழக்கம்.

தீர்த்தாடனம் அல்லது தீர்த்த யாத்திரை என்பது புனித நதிகளில் அல்லது புனித நீர் நிலைகளில் நீராடுவது. ஆன்மீக ரீதியான தூய்மை மற்றும் பாவங்கள் நீங்குவதற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது. இந்து தர்மத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, திருவேணி சங்கமம், கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, காவேரி போன்ற புனித ஆறுகளிலும், ராமேஸ்வரம், காசி, துவாரகை போன்ற ஆலயங்களின் அருகே அமைந்த புனித நீர் நிலைகளுக்குச் சென்று நீராடுவதையும் தீர்த்த யாத்திரை என்கிறோம்.

இதையும் படியுங்கள்:
தமிழக எல்லையில் ஒரு சொர்க்கம்: தாளவாடியின் தனித்துவமான அம்சங்கள்!
Payanam articles

புனிதத் தலங்களை தரிசிப்பதும், புனித நதிகளில் நீராடுவதும், புனித நதிக்கரைகளில் தான தர்மங்கள் செய்வதும் என மன அமைதி தரும் விஷயங்களில் ஈடுபடுவது தீர்த்தாடனம் எனப்படுகிறது. சேத்ராடனம் தீர்த்தாடனம் இரண்டிலுமே பயணத் திட்டமிடல், தங்குமிடம் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அத்துடன் புனித தலங்களுக்குச் செல்லும் பொழுது அந்த இடத்தின் புனித தன்மைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்.

மக்கள் ஏன் புனித யாத்திரை செல்கின்றனர் தெரியுமா?

இந்து மதம், இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம், சீக்கியம் என அனைத்து மதங்களிலுமே புனித யாத்திரைகள் எனப்படும் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன் நோக்கங்கள் நம்பிக்கையை புதுப்பித்தல், பாவங்களுக்கு பரிகாரம் தேடுதல், நன்றி செலுத்துதல், ஆன்மீகத் தேடல்கள், கடவுளுடனான தொடர்பை மேம்படுத்துதல் போன்றவையாகும்.

கஷ்டங்களில் இருந்து தெய்வீக உதவியை நாடுவதற்காகவும் யாத்திரைகள் மேற்கொள்ளப் படுகின்றன. வாழ்க்கையின் அர்த்தம், துன்பம் மற்றும் மரணம் போன்ற ஆழமான கேள்விகளுக்கு பதில்களை தேடுவதற்கான ஒரு ஆன்மீகப் பயணமாகவும் இது அமைகின்றது.

இதையும் படியுங்கள்:
பயணம் ஏன் அவசியம்? ஆய்வுகள் நிரூபிக்கும் நன்மைகள்!
Payanam articles

வாழ்க்கையின் சவால்களில் இருந்து விலகி, அமைதியான சூழலில் மன அமைதியையும் ஆறுதலையும் தேடிச்செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும். புனித யாத்திரை என்பது பல்வேறு மதங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் அனுசரிக்கப்படும் ஒரு உலகளாவிய நடைமுறையாகும். இந்தப் பயணம் சுயவளர்ச்சி, நம்பிக்கைகள், வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை கண்டறிவது ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்முறையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com