
7.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஆஸ்திரேலியா உலகிலுள்ள கண்டங்களுள் மிகச்சிறிய கண்டமாகும். இது உலகின் மிகப் பெரிய தீவாகவும், தாஷ்மேனியாத் தீவு, இந்தியப் பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது வடக்குத் தெற்காக 3700 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கிழக்கு மேற்காக 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு இயற்கை எல்லை கிடையாது. இந்தோனேசியா. கிழக்குத்தீமோர், பப்புவாநியூகினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொமன்தீவுகள், வனுவாட்டு, நியுகலிடோனியா ஆகியன வடக்கேயும். நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல்நாடுகளாய் அமைந்துள்ளன.
பெயர்க்காரணம்- ஆஸ்திரேலியா என்ற பெயர் `Australis` என்ற லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. தெற்கே என்பது இதன் பொருள். ஆங்கில மொழியில் ஆஸ்திரேலியா என்ற சொல் முதன்முதலாக 1625இல் பயன்படுத்தப்பட்டது.