சா.மெய்யப்பன்

என் பெயர் சாத்தப்பன் மெய்யப்பன். நான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கப்பூர் கல்வியமைச்சில் தமிழ் மொழிக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது பகுதிநேரத் தமிழாசிரியராக ஓர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிவருகிறேன். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலும் 18 ஆண்டுகள் பகுதிநேரத் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். `கற்பித்தல்திறன்`, `தமி்ழ்ப் புனைகதைகள் காட்டும் சமுதாயம்` என்னும் இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளேன். உலகத்தமிழாசிரயர் மாநாடுகளிலும் தமிழ் இணைய மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் படித்துள்ளேன். அவ்வப்போது கவிதைகள். கட்டுரைகள், நாடகங்கள் எழுதுவதுண்டு. பயணம் மேற்கொள்வது எனது பொழுது போக்குகளில் ஒன்று. எனினும் எனது எழுத்துப்படைப்பு ஒன்று வெகுஜனப் பத்திரிகையான கல்கி மின்தொகுப்பில் வெளிவருவது இதுதான் முதன் முறை. எனது படைப்பை வெளியிட்டு ஊக்கமூட்டிய கல்கி குழுமத்தினருக்கும் வாசகர்களுக்கும் என்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Connect:
சா.மெய்யப்பன்
Load More
logo
Kalki Online
kalkionline.com