
பிற்பகல் 3,30 மணிக்கு வருவதாகச் சொன்ன எங்கள் உறவுக்காரப் பெண்மணி 4.30 ஆகியும் வரவில்லை. கடையோ 5 மணிக்கு மூடிவிடுவாதாகவும் அதுவரை தங்கலாம் என்றும் எங்களை உள்ளே வந்து இருக்கும்படியும் கடைக்கார முதலாளி கூறினார். வெகு நேரம் சும்மா இருக்கமுடியாது என்பதால் காப்பிக் கடையில் ஒரு காப்பியை வாங்கிப் பருகிவிட்டு கடையில் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். கோலா பார்க்கில் ஓர் ஆஸ்திரேலிய மாது ஒரு பசுமாட்டிலிருந்து இயந்திரம் மூலம் பால்கறந்த காட்சியைக் கண்டு வியப்புற்றேன். நம்மூர்ப் பக்கங்களில் ஆண், பெண் இருபாலாரும் கை விரல்களைக் கொண்டுதான் பால்கறப்பர். இயந்திரம் மூலம் பால்கறக்கும் இக்காட்சி எனக்குப் புதுமையாக இருந்தது.