
இத்தகு பெருமைமிகு மெல்பர்ன் வானூர்தி நிலையத்தில் விமானத்தைவிட்டு இறங்கி முதலில் குடிநுழைவு சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தோம். அங்கு எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். திரும்பிய இடமெல்லாம் பல வெளிநாட்டு முகங்கள். முறையான வரிசையோ எங்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்போ எதுவும் தெளிவாக இல்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றனர். இச்சூழ்நிலையைப் பார்க்கையில் இந்திய விமான நிலையங்கள், சிங்கப்பூரின் கட்டுக்கோப்பான வரிசை முறை இவைதாம் எங்கள் நினைவிற்கு வந்தன.