
அந்நிய தேசத்தில் அருமைத் தமிழைக் கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர் சுரேஷ் ஆஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தான் உழைப்பால் உயர்ந்த கதையையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவரது பெரிய தோட்டத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, ஆப்பிரிகாட், ப்ளம் எனப் பலவகைச் செடிகளையும் அவற்றில் பழுத்துத் தொங்கும் பழங்களையும் கண்டு மகிழ்ந்தோம். ஆளுக்கொரு பெரிய நெகிழிப்பையைக் கொடுத்து வேண்டிய பழங்களைப் பறித்துக்கொள்ளச் சொன்னார். ஆளாளுக்கு வேண்டிய பழங்களை மரத்தில் இருந்து பறித்தும் கீழே விழுந்து கிடந்த பழங்களை எடுத்தும் சுவைத்து மகிழ்ந்தோம். நாங்கள் சென்ற பருவத்தில் செர்ரிப் பழங்கள் சீசன் முடிந்துவிட்டதால் அதை மட்டும் எங்களால் பார்க்க முடியவில்லை.