
பூமராங்கின் இச்செயல் இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய ராமாயணத்தில் ராமன் எய்த அம்பு ராவணன் தலையைத் துண்டித்துவிட்டு, கடலில் சென்று தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு மீண்டும் ராமன் அம்பறாத்துணியில் வந்து சேர்ந்ததாகக் கம்பர் கூறியதை நமக்கு நினைவூட்டுகிறது இல்லையா?
பின் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்று சிட்னி ஓப்ரா ஹவுஸ், சிட்னி கடற்பாலம், குரூஸ் எனப்படும் கப்பல், துறைமுகத்திற்கு அருகிலுள்ள தேவாலாயம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
சுமார் 3 மணிநேர நீண்ட பயணத்திற்குப்பின் ஒரு வியட்னாமிய உணவகத்தில் இரவு உணவு உண்டோம். சாதம், தவ்வு (Tofu) 5 வகையான காய்கறிகள் இருந்தன. ஆனால், இவை அனைத்தும் பல்வேறு விதமாக சமைத்த உணவுகள். பின் பேபிகார்னும் முட்டையும் சேர்ந்த சூப். இத்தகைய உணவு வகைகளுடன் எங்களுடைய இரவு உணவை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். அன்று ஓர் இரவுக்குமட்டும் இந்த விடுதியில் தங்கினோம். மறுநாள் வேறொரு விடுதிக்கு மாறவேண்டும். இது ஒரு சர்வீஸ் அப்பார்ட்மண்ட் போன்ற விடுதி. அறைகள் மிகவும் விசாலமாக இருந்தன. சமைப்பதற்கு வேண்டிய அனைத்து உபகரணங்களும் இருந்தன.