மலைகளும் கடற்கரையும் ஒரே இடத்தில் கொண்ட அழகிய இடங்கள்!

மலைகளும் கடற்கரையும் ஒரே இடத்தில் கொண்ட அழகிய இடங்கள்!

விசாகப்பட்டினம்

து பரபரப்பான துறைமுக நகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டது. ஆர்பரிக்கும் வங்காள விரிகுடா அதன் இடையே காணப்படும்.  இங்கு அழகிய கடற்கரைகளும் அதனை சுற்றியுள்ள மலைத்தொடர்களும் உள்ளன. மேலும், டால்பின் மலை, போரா குகைகள் அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் இன்னும் பல சுற்றுலாத் தலங்களை இங்கு எக்ஸ்ப்ளோர் செய்து கொள்ளலாம்.

கோகர்னா ; கர்நாடகா

திகமாக அறியப்படாத இவ்வூர் இயற்கையின் இனிமையையும், தனிமையையும், வழங்கக் கூடிய சிறந்த இடம். , அழகிய கடற்கரைகளான ஹாஃப் மூன் பீச், ஓம் பீச், நிர்வாணா பீச் மற்றும் குட்லே பீச் போன்றவை இங்கு உள்ளது.  அழகான மலைகள், பாறை சரிவுகள், பசுமையான காடுகளும் சுற்றி இருப்பதால் மலையேற்றத்தையும் இங்கு மேற்கொள்ளலாம்.

கணபதிபுலே, மகாராஷ்டிரா

காராஷ்டிராவின் வெள்ளை மணல் கொங்கன் கடற்கரைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.  ஆறும் கடற்கரையும் சங்கமிக்கும் இடத்தில் கணபதி போன்ற வடிவிலான மலையை கண்கவர் கடற்கரையில் உலா வரும்போது, நாம் காண முடியும். 

யாரடா, ஆந்திரப் பிரதேசம்

ங்காள விரிகுடாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு அற்புதமான கடற்கரை இது. விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மூன்று பக்கங்களும் கண்கவர் மலைகளால் சூழப்பட்டிருப்பது இந்த இடத்தின் சிறப்பம்சமாகும். இந்த கடற்கரையிலிருந்து 3 கி.மீ தொலைவில் டால்பினின் மூக்கை போன்ற குன்றை காணலாம்.

கனகோனா, கோவா

ந்த தெற்கு கோவா பகுதி பலோலம் கடற்கரை, அகோண்டா கடற்கரை மற்றும் பட்டர்ஃபிளை கடற்கரை உள்ளிட்ட கண்கவர் கடற்கரைகளுக்கு தாயகம் என்றே சொல்லலாம். இவை பசுமையான மலைகளால் சூழப்பட்டு, ஒரு பக்கம் கடல் மணல், அதில் உற்சாகமாக ஆடும் தென்னை மரங்கள், மற்றொரு பக்கத்தில் மலைகள் மற்றும் அருவிகள் கவர்ந்திழுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com