மலைகளால் சூழப்பட்ட அழகிய தப்கேஷ்வர் (Tapkeshwar Mahadev Temple) குகைக் கோவில்!

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்
தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்

ப்கேஷ்வர் மகாதேவ் கோவில் டேராடூன் சிட்டியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தன்சு ஆற்றின் (Tons river) கரையில் அமைந்துள்ள இக்கோவில் இயற்கையான குகையில் கட்டப்பட்ட கோவிலாகும். இது தப்கேஷ்வர் கோயிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகும். கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது, இந்த புனித இடத்திற்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

கோவிலுக்கு செல்வதற்கு காடு வழியாக சிறிது தூரம் நடக்க வேண்டும். இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தப்கேஷ்வர் மேளாவும் நடத்தப்படுகிறது. இது டேராடூனில் மிகவும் பிரபலமான கோவிலாகும்.

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்
தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்

6000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இங்குள்ள சிவலிங்கத்தின் மீது கூரையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது. சிவலிங்கத்தின் மீது பாறை களிலிருந்து தொடர்ந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டே இருப்பதால் இக் கோவிலுக்கு "தப்கேஷ்வர்" என பெயர் வந்தது.

இங்குள்ள சிவலிங்கம் தானே சுயம்புவாக வெளிப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகில் பிரம்மாண்டமான அனுமன் சிலையும் உள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களின் குருவான துரோணாச்சாரியார் இங்கு வசித்ததாகவும் அவர் பெயரால் இந்த குகைக்கு "துரோண குகை" என்றும் அழைக்கப்படுகிறது. 

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்
தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்

இங்கு குரு துரோணாச்சாரியார் சிவபெருமானை தவம் செய்து "தனுர் வித்யா" ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இக்கோவில் சித்தி பீடமாகும் கருதப்படுகிறது. இங்கு மா வைஷ்ணோ தேவி சன்னதி உள்ளது. விநாயகர், தாத்தாத்ரேயர் போன்ற சன்னிதிகளும் உள்ளன.

இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் புனித யாத்திரை தலமாகவும் உள்ளது. இங்கு சிவராத்திரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று நிறைய மக்கள் வந்து ஈசனை தரிசித்து செல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!
தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்

மலைகளால் சூழப்பட்ட இந்த குகைக்கு முன்புறம் கந்தக நீர் ஊற்று உள்ளது. இங்கு மக்கள் நீராடிய பின்பே இறைவனை தரிசிக்கிறார்கள். 

காலை ஆறு மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com