payanam articles
Bedspreads in hotels

ஹோட்டல் பெட்ஷீட் ஏன் வெள்ளையா இருக்கு? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

Published on

நாம் வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்யும்போது ரயில் பேருந்துகளில் படுக்கை விரிப்புகள் வெண்மை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். அதேபோல் வெளியூரில் ஹோட்டல்களில் தங்கும் போதும் அங்குள்ள படுக்கை விரிப்புகள் பல வண்ண நிறங்களில் இல்லாமல் வெண்மை நிறத்தில் தான் இருக்கும். இந்த நடைமுறை சுகாதாரம் ,உளவியல் மற்றும் நடைமுறை தன்மையில் வேரூன்றி உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்களும் ரயில்வே அதிகாரிகளும் கூறும் காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

தொழில்துறை நிபுணர்கள் வெண்மை நிற துணிகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிதாகும் என சுட்டிக்காட்டுகின்றனர். ரயில்கள் மற்றும் ஹோட்டல்களில் வெள்ளை துணிகளை கிருமி நீக்கம் செய்ய வழக்கமாக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் வழிமுறைகள் கறைகள் மற்றும் துர்நாற்றங்களை திறம்பட நீக்குகிறது.

வண்ணத் துணிகளில் அடிக்கடி ப்ளீச்சிங் செய்யும் போது அதன் நிறம் விரைவாக மங்கி விடும் .ஆனால் வெள்ளை நிற விரிப்புகள் நிறம் மங்காமல் இருப்பதோடு கிருமிகள் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு துர்நாற்றம் இல்லாமல் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றன.

வெள்ளை நிற படுக்கை விரிப்புகளில் கரைகள் அல்லது அழுக்குகள் இருந்தால் அது உடனடியாக ஊழியர்களின் கண்களுக்கு தெரிவதால் தாமதம் இன்றி அவற்றை மாற்றவும் துவைக்கவும் முடியும். மேலும் பல வண்ணங்களில் இருக்கும் துணிகளில் கறைகள் நம் கண்களுக்கு தெரியாமல் மறைந்து ஊழியர்களோ பயணிகளோ, அசுத்தத்தை கண்டறிய முடியாத பட்சத்தில் அது பாக்டீரியா வளர்ச்சிக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
பயணச் செலவை ஈடுகட்டி வெளிநாட்டுக் கலாச்சாரத்தை அனுபவிக்க ஒரு வழி!
payanam articles

வெள்ளை நிறம் அமைதி மற்றும் சாந்தத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் ரயில்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் பயணிகள் மற்றும் ஹோட்டல்களில் தங்கும் விருந்தினர்களுக்கு இனிமையான சூழலை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

சோர்வடைந்த பயணிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தி, மன ஆறுதலையும், அழகியல் சார்ந்த வசீகரங்களை வெள்ளை நிற உட்புறங்கள் தருவதாகவும் உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் அறைகள் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு சீரான, கச்சிதமான கண்கவர் தோற்றத்தை வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் அளிக்கின்றன. வெள்ளை நிறம் ஆடம்பர தோற்றத்தை தருவதோடு தூய்மை மற்றும் கவனிப்பின் தோற்றத்தை வலுப்படுத்துவதாக இருப்பதால் எளிய விசயமாக நமக்குத் தெரியும் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் உண்மையில் மிகவும் கவனமாக ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.

logo
Kalki Online
kalkionline.com