இந்தியாவில் பார்த்து ரசிக்க வேண்டிய சிறந்த மலைவாச ஸ்தலங்கள்!


Best hill stations...
tourist places
Published on

னி மூடிய சிகரங்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள், சாகச விளையாட்டுகள் என கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் மணாலி ரசித்துப் பார்க்க வேண்டிய மலைவாச ஸ்தலங்களில் ஒன்று.

யற்கை கொஞ்சும் அழகு, கலாச்சார பாரம்பரியம், அழகிய தேயிலை தோட்டங்களுக்கு பெயர் போன டார்ஜிலிங் செல்லலாம். டாய் டிரெயின், தேயிலை தோட்டங்கள் என கண்களுக்கு குளிர்ச்சியாகவும், நம்முடைய பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சிறிது ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் தேர்ந்தெடுக்க வேண்டிய சூப்பரான இடம்.

மயமலையின் அழகிய காட்சிகள், அங்குள்ள அழகிய கட்டடக்கலை, பனித்துளி சாரல்கள் சிம்லா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கக்கூடியவை.

சாகச பிரியர்களுக்கும், இயற்கை நிறைந்த அழகிய காட்சிகளை காண்பதற்கும் இளசுகளின் மிகவும் ஃபேவரட்டான இடமாக உள்ள லடாக்கை வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டும்.

மணாலி...
மணாலி...

டர்ந்த காடுகள் அமைதியான ஏரிகள் அதிகாலை பனித்துளிகள் நிறைந்த புல்வெளிகள் பூக்கள் என இயற்கையோடு இணைந்த கொடைக்கானல் பார்த்து ரசிக்க வேண்டிய சிறந்த மலைவாச ஸ்தலமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரபலமான மலை வாசஸ்தலமான மூணாறு தேனிலவு சுற்றுலாவுக்கு மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்திருக்கும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும்.

காலங்கள் மாறினாலும் மலைகளின் ராணியான ஊட்டியின் அழகு என்றும் குறைந்ததே இல்லை. குளிர்ந்த காற்று, அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளிகள், வெண்மேகக் கூட்டங்கள் என உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி ஊட்டும் ஊட்டியைக் காணத் தவறாதீர்கள்.

ராளமான நீர்வீழ்ச்சிகள் பசுமை நிறைந்த ஏரிகள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கும் சிக்மகளூரு மிகவும் ரசித்து காண வேண்டிய இடமாகும்.

காப்பி தோட்டங்கள் நிறைந்த கூர்க் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இங்கு கொட்டும் நீர்வீழ்ச்சிகளும், அழகிய தேயிலை தோட்டங்களும், பசுமை நிறைந்த மலைப்பகுதிகளும், இயற்கை கொஞ்சும் காட்சிகளும், மனதுக்கு அமைதி தரும் சூழலும் நம்மை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

காஷ்மீரில் பஹல்காமின் கிராமம் போன்ற சூழலும், லிடர் நதியின் அழகும் மற்றும் அரு பள்ளத்தாக்கின் (Aru Valley) அழகையும் ரசிக்கலாம். மிகவும் ரம்யமான இடம்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அழகிய அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திர பிரதேசத்தின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்று. காபி தோட்டங்கள், அருவிகள், குகைகள் என மனதை நிறைக்கும் இயற்கை காட்சிகள் நிறைந்த அருமையான இடம்.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ள ஜிரோ அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளில் இதுவும் ஒன்று.

இதையும் படியுங்கள்:
உலகின் 5 அழகான தெருக்களுக்கு விசிட் அடிக்கலாம் வாங்க!

Best hill stations...

கிழக்கு தொடர்ச்சிமலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு சிறந்த மலைவாச ஸ்தலமாகும். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் அழகிய இடம்.

நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்பும் மக்கள் அதிகம் நாடுவது வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி மலை வாசஸ்தலமாகும். இங்கு பள்ளத்தாக்குகள், மலைகளின் அழகிய காட்சிகள், பாராகிளைடிங், மலை ஏற்றம் போன்ற சாகச விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com