உலகின் 5 அழகான தெருக்களுக்கு விசிட் அடிக்கலாம் வாங்க!

 beautiful streets...
Agueda, PortugalImage Credits: Freepik
Published on

தெருக்கள் என்றதும் குறுகிய சந்துகள்தான் முதலில் நினைவிற்கு வரும். தெருக்களில் என்ன பெரிய அழகியலை புகுத்திவிட முடியும் என்று நினைப்பவர்கள் உலகில் உள்ள சில அழகிய தெருக்களைப் பற்றி அறிந்துக் கொள்வது அவசியமாகும்.

1.Agueda, Portugal.

போர்ச்சுக்கலில் உள்ள Agueda என்னும் நகரத்தில் அமைந்துள்ள எண்ணற்ற குடைகள்தான் இந்த தெருவிற்கே அழகை சேர்க்கிறது. பலவண்ண நிறங்களில் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் குடைகளை பார்க்கும் பொழுது கண்ணை கவரும் அழகில் இருக்கும். இவ்விடத்தை ரசிப்பதற்காக மட்டுமில்லாமல் நிறைய புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் இங்கு எண்ணற்ற சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.

Chengdu, China
Chengdu, ChinaImage Credits: China Daily

2.Chengdu, China.

சீனாவில் செங்குடு நகரத்தில் அமைந்துள்ள Jinli Street வருடம் முழுவதும் அழகாக இருந்தாலும், சீனப் புத்தாண்டின்போது பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும். பலவண்ண விளக்குகளும், அலங்காரங்களும் தெரு முழுவதும் செய்யப்பட்டு ஜொலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Kyoto, Japan
Kyoto, JapanImage Credits: My Japan Guide

3.Kyoto, Japan.

ஜப்பானில் உள்ள Kyoto நகரத்தில் அமைந்துள்ள Tetsugaku no michi என்னும் 1.2 மைல் நீளம் கொண்ட தெருவின் சாலையில் வரிசையாக அமைந்திருக்கும் செர்ரி மரங்களை பார்ப்பதற்காகவே சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வருவார்கள். ஏப்ரல் மாதத்தில் இங்கு வந்தால், செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

Chefchaouen, Morocco
Chefchaouen, MoroccoImage Credits: iStock

4.Chefchaouen, Morocco.

மொரோக்கோவின் வடமேற்கில் அமைந்துள்ள நகரம் தான் Chefchaouen ஆகும். இங்குள்ள கட்டடங்கள் அனைத்தும் நீலவண்ணத்தில் இருப்பதால் இந்த நகரத்தை ‘Blue city’ என்று அழைக்கிறார்கள். இந்த நகரத்திற்கு வாழ வந்த யூதர்கள் இங்குள்ள வீடுகளுக்கு நீலநிறம் அடித்ததற்கான முக்கிய காரணம், அவர்களின் மத நம்பிக்கையின்படி நீலநிறம் கடவுளைக் குறிப்பதாக நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் திருமணத்தில் ஜொலி ஜொலிக்க இந்த 5 டிப்ஸை நோட் பண்ணிக்கோங்க!
 beautiful streets...
Fontainhas street, Goa
Fontainhas street, GoaImage Credits: YouTube

5.Fontainhas street, Goa.

இந்தியாவில் கோவாவின் தலைநகரமான Panjim ல் அமைந்துள்ள Fontainhas street ல் உள்ள வீடுகள் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள வீடுகள் போர்ச்சுகல் மக்களின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்பை தாங்கி நிற்பதால், இத்தகைய பெருமையை பெற்றுள்ளது. இந்த தெரு பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கும். இந்த 5 தெருக்களில் உங்களை மிகவும் கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com