
நைனிடால் என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாச ஸ்தலமாகும். இது ஒரு ஏரி மாவட்டம். இந்தியாவின் ஏரி மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த ஏரி ஏழு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இயற்கை காட்சிகள் குளிர்கால வெப்பநிலை மற்றும் பிரிட்டிஷ்காரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
குமோவோன் பிரிவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. படகு சவாரி செய்ய ஏற்ற இடம் ஆகும். ஆயர்பட்டா, தேவ பட்டா போன்ற ஏழு மலைகளால் சூழப்பட்டது. ஏரியின் கரையில் நைனா தேவி கோவில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டிடங்கள் பள்ளிகள் அமைந்துள்ளன மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது.
இதன் அருகில் 55 கிலோ மீட்டர் தொலைவில் பந்த் நகர் விமான நிலையம் உள்ளது டில்லி மற்றும் மும்பையில் இருந்து இந்த இடத்திற்கு விமான போக்குவரத்து வசதி உள்ளது.
டேராடூனில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இனி நைனிடாலில் சுற்றி பார்க்கவேண்டிய சில இடங்களை பற்றி பார்க்கலாம்.
இது பிறை வடிவத்தில் குமொவோன் பகுதியில் அமைந்துள்ளது. படகு சவாரி செய்ய ஏற்ற இடம் ஆகும். நடைப்பயிற்சி செய்வதற்கும் உகந்த இடமாக உள்ளது. இந்த இடத்திலிருந்து சூரிய உதயம் சூரிய அஸ்தமனத்தை அருகில் இருந்து கண்டு களிக்கலாம்.
கத்கோடம் ரயில் நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
அயர் பட்டா மலைப்பகுதியில் இருந்து 2300 மீட்டர் உயரத்தில் உள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். ஓக் தேவதாரு பைன் மரங்களால் சூழப்பட்டுள்ளது. சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்த இடத்தில் குதிரை வண்டி வாடகை எடுத்து ஏரியா முழுவதையும் சுற்றி பார்க்கலாம்
பங் கோட் மற்றும் கில் பெரிட் சரணாலயம் நைனிடாலின் காப்புக்காட்டில் அமைந்துள்ளது. பைன் தேவதாரு மரங்கள் நிறைந்துள்ளது. இந்த இடத்தில் 600க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. கிரி போன் போர்க் டெயில் மரங்கொத்தி பறவைகள் பழுப்பு நிற ஆந்தைகள் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் உள்ளன.
இவை தவிர சிறுத்தை குறைக்கும் மான் சாம்பார் போன்ற விலங்குகளும் நிறைய உள்ளன. கார் மூலமாகவும் சுற்றிப் பார்க்கலாம். நைனிடால் ரயில் நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நைனிடாலில் உள்ள மிக உயரமான சிகரம் ஆகும். 1962 இல் நடைபெற்ற சீன போருக்கு பின் நைனா சிகரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மலை ஏற்றத்திற்கு சிறந்த இடமாகும்.குதிரை சவாரியும் செய்யலாம்.
கடல் மட்டத்திலிருந்து 2600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கவர்ச்சிகரமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். நைனிடாலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஈகோ கேவ் கார்டன் என அழைக்கப்படுகிறது. குகைகள் மற்றும் தொங்கு தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த இடத்தில் ஆறு குகைகள் உள்ளன. இயற்கை இசை நீரூற்றுகள் ஆடியோ விஷுவல் எபெக்ட்ஸ் போன்றவை சிறப்பு அம்சமாக இந்த இடத்தில் உள்ளது.
இங்குள்ள ஆறு குகைகளும் வவ்வால் புலி நரி சிறுத்தை அணில் முள்ளம்பன்றி வடிவத்தில் உள்ளன. நைனி டாலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டாக்ஸி மூலம் செல்லலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.