கவிதை: இயற்கை அன்னை வடித்த ஓவியம்: மணாலி காவியம்!

memories-of-himalayas
memories-of-himalayas
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

குலு பள்ளத்தாக்கின் பசுமை வழியே - நம்

பயணம் தொடங்கியது பரவசப் புள்ளியில்! 

பியாஸ் நதியின்  ஓசை 

இசை பாட - அதன் துள்ளும் அலைகளில்

மனதின் பாரங்கள் கரைந்தன நொடிப்பொழுதில்! 

ஹிடிம்பா தேவியின்  மரக்கோவில் நிழலில்

அமைதி தேடி அலைந்தது நம் கண்கள்!

வசிஷ்டர் குளத்தின் வெந்நீர்ப் புகையில்

 உறைந்த குளிர் மெல்ல 

மறைந்ததே! 

சோலங் பள்ளத்தாக்கின் சாகசப் பாதையில் 

சுதந்திரத்தின் சுவாசத்தை மொத்தமாய் சுவாசித்தே

ஆலாய்ப் பறந்தோம் ஆகாயத்தில்! 

வெள்ளிப்  பனிமலைகள் விழி முன்னே விரிய

வெண்பட்டு போர்த்திய ரோத்தங்பாஸ் 

கனவுலகிற்கு நம்மை அழைத்துச்சென்றதே 

நினைவில் என்றும் நிலைத்தாட! 

அடல் சுரங்கப்பாதை தந்த ஆச்சரியம் 

அடுத்த முனை காட்டியது

பனிப்போர்வையின் ரகசியம்!

மணாலி மால் ரோட்டில் மௌனமாய் நடந்தோம்

மேகங்கள் முத்தமிடம் இமயத்தின் மடியில்

நாம் கொண்டாடி தீர்த்தோம்

ஓர் அழகின் பொழுதை! 

குழுவாய் இணைந்தே கூச்சலிட்ட அந்நொடிகள்

காற்றோடு கலந்தே கவிதையாய் மாறின! 

நினைவுப் பரிசுகளைப் புன்னகையோடு சுமந்தோம்! இயற்கை அன்னை வடித்த ஓவியம்- 

இந்தப் பயணம் என்றும் மாறாத காவியம்!

logo
Kalki Online
kalkionline.com