
கோடை காலத்தில் கொளுத்தும் வெயில்தான் நாம் அறிந்தது. ஆனால் கோடையிலும் பனி பொழியும் இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வகையில் கோடையிலும் பனிப்பொழியும் 8 சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.யும்தாங் பள்ளத்தாக்கு:
இந்தியாவின் அழகிய இடங்களில் ஒன்றாகவும் சிக்கிமின் மலர் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் சிக்கிமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யும்தாங் பள்ளத்தாக்கு, கோடைக் காலங்களிலும் பனிப்பொழிவைப் பெறுகிறது. இதற்கு அருகில் லாச்சுங் பள்ளத்தாக்கு ,ஜீரோ பாயிண்ட் ஆகியவை உள்ளன.
2.பஹல்காம் :
இமயமலை மலைகள் மற்றும் உயரமான பைன் காடுகளுடன் மெல்லிய பனியால் மூடப்பட்டிருக்கும் , கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் காஷ்மீரில் வசதியாக அமர்ந்திருக்கும் பஹல்காம், கோடைக்கு ஏற்ற குளுகுளு பனிப்பிரதேசமாக உள்ளது.
3.ட்ராஸ் பள்ளத்தாக்கு:
லடாக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் ட்ராஸ் பள்ளத்தாக்கு10990 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் கோடையிலும் பனிப்பொழிவை காண முடியும் .
4.லே:
குளிர்காலத்தில் உறைந்தும் கோடை காலத்தில் பனிப்பொழிவை காணும் சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும் லே சில முக்கிய சாகச விளையாட்டு ஸ்பாட் ஆக இருக்கிறது.
5.குல்மார்க்:
ஜம்மு மற்றும் காஷ்மீர் இமயமலைச் சிகரங்களின் பின்னணியில் இருக்கும் குல்மார்க் குளிர்காலத்தில் மட்டுமல்ல, கோடை காலங்களிலும் இனிமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலையைக் கொண்டுள்ளது .
6.முன்சியாரி:
உத்தரகாண்ட் பித்தோராகர் மாவட்டத்தில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ள முன்சியாரி பனி படர்ந்த சிகரங்களால் சூழப்பட்டிருப்பதால், கோடைக்காலத்தில் கொளுத்தும் வெப்பத்தை மறந்து, சில்லென்று இருக்கலாம்.
7.ஜூலுக் :
கிழக்கு சிக்கிமில் உள்ள ஜூலுக் கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அமைதியான இமயமலை கிராமம் கஞ்சன்ஜங்கா உட்பட லுங்துங், கலாபோக்ரி ஏரி , நாதாங் பள்ளத்தாக்கு ஆகியவற்றுடன் பனி படர்ந்து காணப்படுகிறது.
8.ரோஹ்தாங் கணவாய்:
உயரமான மலைப்பாதைகளில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் பிர் பஞ்சால் மலைத்தொடரில் 13050 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பாஸ்குலு பள்ளத்தாக்கு, லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள இது மே முதல் நவம்பர் வரை பனிபடர்ந்து காணப்படுகிறது.
மேற்கூறிய 8 இடங்களும் கோடை காலத்திற்கு ஏற்ற பனிப்பொழியும் இடங்களாக இந்தியாவில் இருக்கின்றன.