இந்த ரிசார்ட்டில் அமைந்துள்ள நீருக்கடியில் உள்ள ஹோட்டல் அறைகள், ஹோட்டலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மீன்வளையில் தூங்குவது போல் ஒரு உணர்வை தருகிறது. இந்த அறையில் இருக்கும் போது கண்ணாடி அறைகளிலிருந்து ஆழ்கடல் மீன்கள் கூட எட்டிப் பார்க்கின்றன. ஆழ்கடல் அனுபவம், மீன் பிடித்தல், ஸ்நோர் கெலிங் மற்றும் கயாக்கிங் ஆகியவற்றிற்காக சுற்றுலா பயணிகள் இந்த ஹோட்டலில் தங்குகின்றனர்.
எகிப்தில் இருக்கும் இந்த ஹோட்டல் அறையின் ஜன்னலை திறந்தால் உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்டை தெளிவாக பார்க்க முடியும். இந்த அழகிய காட்சியைக் காண்பதற்காகவே நிறைய பேர் இங்கு வந்து தங்குகிறார்கள்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த ஹோட்டல் அறையில் இருந்து வெளியே நடமாடி கொண்டிருக்கும் ஓநாய்கள் நம் அருகில் வந்து செல்வதை பார்த்து ரசிக்க முடியும். இந்த திரில்லிங்கான அனுபவத்தை அனுபவிப்பதற்காகவே நிறைய பேர் இந்த ஓட்டலில் வந்து தங்கிச் செல்கிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் தான் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் ரூமிலிருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை நம்மால் தெளிவாக பார்க்க முடியும். இந்த வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்காக இந்த ஹோட்டலில் நிறைய பேர் வந்து தங்குகிறார்கள்.
ஆயிரம் வருடம் பழமையான ராஜ காலத்து கட்டடத்தில் தான் இந்த ஹோட்டலை கட்டியிருக்கிறார்கள். இந்த ஹோட்டல் ரூம் ஜன்னலில் இருந்து இந்த வரலாற்று மிக்க கட்டடத்தைச் சுற்றி பார்க்கவே நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குகிறார்கள்.
ஜப்பானில் நாகாசாகி நகரத்தில் அமைந்துள்ள உலகின் முதல் ரோபோ ஊழியர்களை கொண்ட ஹோட்டல் இது.
இதற்காகவே கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தற்போது ரோபோக்களுடன், மனிதர்களும் பணி செய்கின்றனர். சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு அதில் இயங்கும் ஹோட்டல் இது.
ஜப்பானில் ஒகினாவா நகரில் உள்ளது இந்த ஹோட்டல். இரு மரங்களின் மீது தரையிலிருந்து 2 மீட்டர் உயரத்தில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இங்கு சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்துகின்றனர். இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இலவசமாக காடு சுற்றி காண்பிக்கப்படுகிறது.