
இன்றைய கால இளைஞர்கள் பலரும் பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கிறார்கள். பல கனவுகளோடு, லோன், வீட்டு சுமை என பல பொறுப்புகளை சுமந்து கொண்டு ஓடிகிறார்கள். இதனாலேயே பலரும் டூர் செல்ல அதிகம் விரும்புகிறார்கள். சமீப காலமாகவே சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார கடைசியில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. முந்தைய காலங்களில் பிக்னிக் என்பது கோடை விடுமுறை காலங்களில் தான் இருக்கும். ஆனால் தற்போது வாரம் வாரம் சுற்றுலா செல்லும் அளவிற்கு பலருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகிவிட்டது. இதனால் பணி, சுமை என அனைத்தில் இருந்தும் விலகி மக்கள் சுற்றுலாவை அனுபவிக்கிறார்கள்.
அப்படி செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், இந்த மாதம் சுற்றுலா செல்ல எந்த இடம் சரியானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நந்தி ஹில்ஸ்: கர்நாடகாவில் உள்ள பிரபல சுற்றுலா தலம் மலையேற்றத்திற்கு அற்புதமான இடம். இங்கு சுற்றிப்பார்க்கவும், முகாமிடவும் அருமையாக இருக்கும். நந்தி ஹில்ஸில் இருந்து கிடைக்கும் மலைகளின் காட்சிகள் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
மூணார்: கேரளாவில் பிரபலமான சுற்றுலா தலமான இங்கு மலையேற்றம் நல்ல அனுபவத்தை கொடுக்கும். இங்கு நீங்கள் சுற்றிப் பார்க்கவும் பல இடங்கள் இருக்கின்றன.
டல்ஹவுஸி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஆழமான பள்ளதாக்குகளில் சாகசமாக டிரெக்கிங்கை மேற்கொள்ளலாம். அங்கு தட்பவெப்பமும் அருமையாக இருக்கும்.
சிக்மகளூர்: கர்நாடகாவில் உள்ள அருமையான இந்த சுற்றுலா தலம் மலையேற்றத்திற்கு ஏற்ற இடம். பசுமையான இந்த மலைப் பிரதேசத்தில் செப்டம்பரில் ஜாலியாக சென்று வரலாம்.
மஹாபலேஷ்வர்: மகாராஷ்டிராவில் உள்ள இந்த பகுதியில் இயற்கை காட்சிகள் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். தொடர்ந்து மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். குளிர்ந்த வானிலை நிலவும்.
மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்த மலை நகரத்தில் டிரெக்கிங் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். குளிர் நிறைந்த பகுதி உங்களுக்கு செப்டம்பரில் அருமையான அனுபவத்தை கொடுக்கும்.
லடாக்: லே லடாக் டிரெக்கிங் செய்வதன் மூலம் இயற்கையின் முழு அழகையும் நீங்கள் தரிசிக்கலாம். இங்குள்ள வானிலையும் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்கும்.