
தென்கிழக்கு ஆசியாவில் இமயமலையை அடுத்துள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ள சிறிய நாடுதான் பூட்டான். தேசிய பொக்கிஷங்களைக் கொண்ட தனித்துவமான நாடாகும். உலகில் எங்கு சென்றாலும் காணமுடியாத அரிய பொக்கிஷங்கள் அமைதியான சூழ்நிலை. ஆன்மீக பூமி பாசமுள்ள மனிதர்கள் இவை அனைத்தையும் கொண்ட நாடு பூட்டான் என்று சொன்னால் மிகையாகாது.
டேக் இன் என்ற குனு ஆடு தேசிய விலங்காக கருதப்படுகிறது. இந்த ஆடு குட்டையான கால்கள் விசித்திரமான மூக்கு கொண்டது. பூட்டான் தலைநகர் திம்புவிலும் மற்ற நகரங்களிலும்
போக்குவரத்து சிக்னல்களை பார்க்க முடியாது. போக்குவரத்து காவலர்கள்தான் வாகனங்களை ஒழுங்குபடுத்துகிறார்கள். இதுவரை ஒரு சிறிய விபத்து கூட நடந்ததில்லை. அந்த அளவுக்கு அங்குள்ள மக்கள் ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்வார்கள்.
டா என்ற வில்வித்தை தேசிய விளையாட்டாக உள்ளது. பூட்டான் மக்கள் ஆண்களும் பெண்களும் கலர் கலராக உடை அணிகிறார்கள். பெண்கள் அணியும் ஆடைக்கு இரா என்று பெயர். ஆண்கள் அணியும் ஆடைக்கு கோ என்று பெயர். சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஆகும்.
உலகின் மிகப்பெரிய சந்திர சூரிய நாட்காட்டி இங்கு உள்ளது. மகிழ்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இங்குள்ள மக்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். இதை குறிக்கும் வகையில் ஜி என் எச் குறியீடு உள்ளது. தலைநகர் திம்புவில் தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றாலும் ஒரு சிறு விபத்து கூட நடந்தது இல்லை.
வில் வித்தையின்போது இவர்கள் வண்ண உடைகளை அணிகிறார்கள். பிரபலமான உணவு ஏமா தட்சி என்ற உணவாகும். காரமான மிளகாய் காரமான குழம்பு காரமான சீஸ் வெங்காயம் காளான் சேர்த்து செய்யப்படும் வித்தியாசமான உணவு. இதை இங்கு உள்ள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
புலி காட்டுகோவில் மற்றும் குகை இங்கு பிரபலமானது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 3500 மீட்டர் உயரம் உள்ள மலை மது அமைந்துள்ளது இந்த மடாலயம். இரண்டாவது புத்தர் என்று அழைக்கப்படும் குருவின் போச் என்பவர் புலியின் முதுகு மீது அமர்ந்து இங்க மடாலயத்திற்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
சுற்றுலா கட்டணமாக 100 டாலர் வசூலிக்கப்படுகிறது. லிங்க சிவன் கோவில் மிகவும் பிரபலமானது. பெண்கள் கர்ப்பம் தரிக்க இந்த லிங்கம் கோயிலை நாடி வருகிறார்கள். 1499 ஆம் ஆண்டு இந்த கோவிலை ஒரு புத்த துறவி கட்டினார். பூட்டான் கட்டிடக்கலைக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் சிற்பக் கலைகளுக்கும் பேர் போனது ஆயிரக்கணக்கான நினைவுச் சின்னங்கள் கோவில்கள் உள்ளது. டிராகன் உருவம் அலங்கார சின்னமாகவும் மங்களகரமாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் ஆண்டுதோறும் சுமார் 25 பண்டிகைகளை கொண்டாடு கிறார்கள்.
சந்திர சூரியன நாட்காட்டி புத்தா லோசர் எனஅழைக்கப்படுகிறது இங்குள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் எட்டு விமானங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இந்த விமான தளத்தில் விமானங்களை இறக்குவது என்பது சாகச செயலாக கருதப்படுகிறது. வீணை பிடில்போன்ற கருவிகளை இசைக்காக பயன்படுத்தி வருகின்றனர். பச்சை பசேல் என்று பயிர்கள் இருந்தாலும் நிலப்பரப்பில் அரிசி பார்லி உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.
பாரம்பரிய மருத்துவம் இங்கு சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது. சோ பா ரிக் என்று பாரம்பரிய மருத்துவம் அழைக்கப்படுகிறது. தேசிய கொடியில் ஆரஞ்சு குங்கும நிறம் கொண்ட கொடியில் மத்தியில் வெள்ளை நிற டிராகன் இடம் பெற்று இருக்கும். டிராகன் புனிதமாக ருதப்படுகிறது. தேசிய மலருக்கு நீல பாப்பி என்று பெயர். இது தூய்மையான குணத்தை குறிக்கும்.
2008இல் முடியாட்சிக்கு மாறியது. மன்னர் செல்வாக்கு உடன் இருந்தாலும் பிரதமர்தான் நிர்வாக பொறுப்பை கவனித்து வருகிறார். இங்குள்ள மக்கள் நமது 500 ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மற்ற நோட்டுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். சுத்தமான காற்றுடன் இயற்கையான சூழ்நிலையில உள்ளதால் கார்பன் எதிர்மறை நாடு என்று போற்றப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை படிக்க அனுமதி இல்லை.
இங்குள்ள மக்கள் தங்கள் பிறப்பை ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை அதற்கு பதிலாக புத்தாண்டையே தன் பிறந்த நாளாக நினைத்து கொண்டாடி வருகிறார்கள்.
1989 இல்தான் இங்கு தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டது. பூட்டானில் பலதார திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு.
பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் தேசிய உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த தூய்மையான நகரத்தையும் நாட்டையும் காண்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம் ஆகும்.