அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் போயிங் விமான நிறுவனம்!

Boeing Airlines to help the American economy!
Payanam articles...
Published on

லகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் உள்ளது. சுமார் 1.50 லட்சம் பேர் பணிபுரியும் இந்த நிறுவனம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு 79 பில்லியன் டாலர் அளவுக்கு தனது பங்களிப்பை வழங்குகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் விமானங்களை உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன‌.

உலகப்புகழ் பெற்ற போயிங் ரக விமானங்கள் 1958 ம்ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியவர். எட்வர்ட் போயிங் என்ற அமெரிக்க பொறியாளர் . இவரின் பெயரில்தான் போயிங் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.இந் நிறுவனத்தை அவர் நிறுவியபோது அவரின் வயது 46.

முதன்முதலாக போயிங் 707 ரக விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ஒவ்வொன்றாக 727,737,747,757 ,767,777 என வகை வகையாக தயாரிக்கப் பட்டன.ஒவ்வொரு மாடலிலும் பல வகைகள் உண்டு. அதில் அதிக வரவேற்பைப் பெற்றது 707 மற்றும் 727 மாடல்கள் தான்.

777 ரக மாடல்கள் போயிங் விமானங்களில் லேட்டஸ்ட் மாடல்கள். இதில் தான் முதல் முறையாக இரட்டை என்ஜின்கள் அறிமுகமாயின.1995 ம் ஆண்டு இது அறிமுகமானது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் முக்கிய இடமான "செட்டில் பெக்கெட்" எனுமிடத்தில் போயிங் விமான நிறுவனங்கள் உள்ளது. போயிங் விமான நிறுவனங்கள் முன்று வகையான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.முதலாவதாக வாணிப நோக்கில் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பது. இரண்டாவது இராணுவ படை விமானங்கள் மற்றும் வான்வெளி ஆராய்ச்சி கலங்களை உருவாக்குவது. மூன்றாவதாக தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரித்தல்.

உலகெங்கும் உள்ள 700 ற்கும் மேற்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் போயிங் ரக விமானங்கள்தான் அங்குமிங்கும் பறந்த வண்ணம் உள்ளன.2.50.000 முறைக்கும் மேற்பட்ட முறை நிலாவிற்கு சென்று வந்த தூரத்திற்கு  சமமான தூரத்தை எங்களது போயிங் ரக விமானங்கள் இவ்வுலகில் பறந்து சென்று வந்துள்ளது என்று ஒரு முறை அவ்விமான நிறுவனம் புள்ளி விவரங்கள் கூறியது.

ஆரம்ப காலத்தில் போயிங் நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டும் தான் விமானங்களளைத் தயாரித்து வழங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது போயிங் B17 மற்றும் B 29 போன்ற குண்டு போடும் விமானங்களை அமெரிக்க ராணுவத்திற்கு தயாரித்து வழங்கியுள்ளது.

உலகின் மிக நீளமான போயிங் விமானம் போயிங் 800 ரக விமானங்கள் தான். இதன் நீளம் 130 அடி மிகப் பெரிய இறக்கைகள் கொண்டது. இதில் 200 பேர் பயணம் செய்யலாம். குறைந்த எரிபொருளின் அதிக தூரம் இரைச்சல் இல்லாமல் பறப்பது இதன் தனிச்சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்!
Boeing Airlines to help the American economy!

1960 ம் ஆண்டுதான் இந்தியாவிற்கு பிப்ரவரி மாதம் முதல் முறையாக போயிங் விமானம் வந்தது.707 ரக விமானம்தான் முதல் முறையாக இந்தியாவிற்கு வந்தது. "எம்பயர் அசோகா" என பெயரிடப்பட்ட இந்த விமானம் மும்பை நகரத்திற்கும் நியூயார்க் நகரத்திற்கும் இடையே தன் பயணத்தை துவங்கியது.

2003 ஆம் ஆண்டில் போயிங் 787 ட்ரீம்லைனருக்கான ஆர்டர்களை  எடுக்கத் தொடங்கியது, இது  வேகத்துடன் கூடிய பரந்த-உடல், நீண்ட தூர  செல்லும் விமானங்கள் .ஆனால் மிகவும் மேம்பட்ட எரிபொருள் திறன் கொண்ட புதிய உயர்-பைபாஸ் டர்போ என்ஜின்களுடன் வந்தது. இதை பிராட் & விட்னி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ்  வடிவமைப்பு செய்தது.

அன்மையில் முகேஷ் அம்பானி வாங்கிய போயிங் 737 மேக்ஸ் 9 விலை என்ன தெரியுமா? போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் அடிப்படை விலை 118.5 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 987 கோடி இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com