இந்தியா இயற்கை காட்சிகளை உள்ளடக்கிய பிரமிக்க வைக்கும் கடலோர நகரங்களை உள்ளடக்கிய நாடாகும். இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை நகரங்களை தெரிந்து கொள்வோம் இப்பதிவில்.
ஆலப்புழா கிழக்கின் வெனிஸ் என்றும் அழைக்கப் படுகிறது, இங்குள்ள உப்பங்கழிகள், படகுப் பயணங்கள் மற்றும் மராரி கடற்கரை உள்ளிட்டவை உலக அளவில் புகழ்பெற்றவை.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், பாம்பன் பாலம் மற்றும் புண்ணிய தீர்த்தத்திற்கு பெயர் பெற்ற ராமநாதசுவாமி கோவிலை உள்ளடக்கிய அழகிய கடற்கரை நகரமாகும்.
கோகர்ணா நகரம் ஓம் பீச் மற்றும் குட்லே பீச் போன்ற அதிகம் அறியப்படாத, ஆனால் அழகான கடற்கரை களைக் கொண்டிருக்கும் அழகிய நகராகும்.
கோவளம் லைட்ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் ஆகிய மூன்று அழகிய கடற்கரைகளை கொண்ட அற்புதமான நகரமாகும்.
மாண்ட்வி அழகான கடற்கரையுடன் விஜய் விலாஸ் அரண்மனையின் கட்டிடக்கலைக்காக புகழ் பெற்றதோடு கடற்கரை பிரியர்களைத் தொடர்ந்து ஈர்க்கிறது.
அரபிக்கடலின் மனதைக் கவரும் காட்சிகளைக் கொண்ட எழில்மிகு வர்கலா கடற்கரை தென்னிந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.
கன்னியாகுமரி இந்தியாவின் தென்முனை என அழைக்கப்படுவதோடு ,சூரிய அஸ்தமனத்தைக்காண மிகச் சிறப்பான இடமாக இருக்கிறது வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் காட்சியை காண்பதோடு மகேந்திரகிரி மலையில் மலையேற்றமும் செய்யலாம்.
புதுச்சேரி நகரம் பிரெஞ்சு கட்டிடக்கலை, அழகான கஃபேக்களுக்குப் பெயர் பெற்றது. பாரடைஸ் பீச் மற்றும் ப்ரோமனேட் பீச் போன்ற அழகிய கடற்கரைகள் உள்ள பார்க்க வேண்டிய கடற்கரை நகரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
டையூ ஒரு அமைதியான அழகான அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத தீவு. நாகோவா பீச் மற்றும் கோக்லா பீச் போன்ற கடற்கரைகள் நீச்சலுக்கு ஏற்றதாக கருதப்படுவதோடு சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
வங்காள விரிகுடாவை ஒட்டிய மெரினா கடற்ரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவற்றைக் கொண்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் உள்ள பிரமிக்க வைக்கும் கடற்கரை நகரங்களில் ஒன்றாகும்.