சென்னை டு ஸ்ரீலங்கா: முதல் பகுதி!

Chennai To Sri Lanka Tourism
Chennai To Sri Lanka Tourism
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

முதல் நாள் 4.8.26:

ஸ்ரீலங்கா சுற்றுலாப் பயணமாக 8 நாட்கள் சென்றோம். எங்களுக்கு சென்னையிலிருந்து காலை 10:30 மணிக்கு விமானம் புறப்பட்டது. 11:40க் கெல்லாம் ஸ்ரீலங்காவை அடைந்தோம். பயண நேரம் ஒரு மணி 10 நிமிடங்கள் தான். நாங்கள் 34 பேர் குழுக்களாகச் சென்றோம். ஏர்போர்ட்டில் இருந்து எங்களை வேனில் நேராக நாங்கள் தங்கும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

வெல்கம் ட்ரிங்க்ஸுடன் ஆரம்பித்த காலை உணவு மிகவும் அருமையாக இருந்தது. இங்கு ஸ்ரீலங்கா உணவு எல்லாமே வித்தியாசமான ருசியில் இருந்தது. ஸ்ரீலங்கா மசாலா பொருட்களுக்குப் பெயர் பெற்றது. சாப்பிட்டுவிட்டு ரூமிற்குச் சென்று, (எங்களுக்கு 4வது மாடியில் ரூம் ஒதுக்கி இருந்தார்கள்) பிரஷாகி நேராக நயினா தீவிற்கு 3.30 மணிக்கு புறப்பட்டோம்.

நயினா தீவு:

நயினா தீவு (Nainativu) என்பது ஸ்ரீலங்கா நாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு சிறிய தீவாகும். சங்க இலக்கியங்களில் இத்தீவு 'மணிபல்லவம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தீவு.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com