சென்னை டு ஸ்ரீலங்கா: ஐந்தாம் பகுதி!

Chennai To Sri Lanka Tourism -  Ramboda Waterfalls
Chennai To Sri Lanka Tourism - Ramboda Waterfalls
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஐந்தாம் நாள் 8.8.26.

இன்று காண்டியில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காலை 7:30 மணிக்கு எல்லாம் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு 8 மணிக்கெல்லாம் வேன் ஏறியாச்சு. கண்டியிலிருந்து நுவரெலியா(Nuwara-Eliya) ஹில் ஸ்டேஷனுக்கான தூரம் 77 கிலோ மீட்டர், 3 1/2 மணி நேரம் பயணம் செய்யவேண்டும்.

மலையில் நிறைய வளைவுகள் (hair pin bend) இருந்தது. திருப்பதியைவிட ஏகப்பட்ட வளைவுகள். வளைந்து வளைந்து மலையில் சென்றது. மலைப்பாதையில் இப்படி வளைந்து சென்றதால் லேசாக தலை சுற்றி, வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போல் சங்கடப்படுத்தியது.

வழியெங்கும் பச்சை பசேல் என்று தேயிலைத் தோட்டங்களும், அருவிகளும், இயற்கை காட்சிகளும் நிறைந்த இந்தப் பயணம் உலகின் மிக அழகான மலைப்பயணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இயற்கை அழகை முழுமையாக ரசித்துக் கொண்டு வழியில் ரம்பொடை அருவி (Ramboda Falls) மற்றும் தேயிலை தோட்டங்களை பார்த்துக் கொண்டே சென்றோம். விதவிதமான பழங்களும் வழியெங்கும் கண்ணில் பட்டது. குறிப்பாக துரியன் பழம் இங்கு அதிகம் காணப்பட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com