சென்னை டு ஸ்ரீலங்கா: ஏழாம் பகுதி!

Chennai To Sri Lanka Tourism -  Rumassala Hill
Chennai To Sri Lanka Tourism - Rumassala Hill
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

7ஆம் நாள் 10.8.26.

கதிர்காமத்தில் நேற்று இரவு முருகனை தரிசித்து விட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு லாட்ஜில் தங்கினோம். அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து 7 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு 8 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பயண நேரம் 5 மணி நேரம். இது நம்ம சென்னை ஓஎம்ஆர் போல் பீச் ரோடுதான். வழி எங்கும் கடற்கரை நம்முடனேயே வருகிறது. அதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். பீச் ரோட்டில் வேகத்தடை கிடையாது என்பதால் இங்கு செம்ம வேகத்தில் செம ஸ்பீடாகச் சென்றோம்.

ஹைவேயில் 3 1/2 மணி நேரம் பயணம் செய்ததும் ஒரு இடத்தில் சிறிது நிறுத்தினார்கள். அங்கு மண் சட்டியில் கெட்டியான தயிரும், அதன் மேல் தேன் விட்டு ஒரு ஸ்பூனும் போட்டுத் தந்தார்கள். தேனை தயிரில் கலந்து சாப்பிட உண்மையிலேயே ருசியாகத்தான் இருந்தது.

நாம் பொதுவாக லஸ்ஸி என்ற பெயரில் தயிரில் சர்க்கரை சேர்ப்போம். ஆனால் இங்கு மாறுதலாக தேன் கலந்து கொடுக்கிறார்கள். ஒரு சின்ன மண்சட்டி தயிர் அவர்கள் ரூபாயில் 200 ரூபாய். சாப்பிட்டுவிட்டு திரும்பவும் வேனில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com