இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான மலைப் பிரதேசம்தான் டார்ஜிலிங். இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லாத இந்த இடம், கலாச்சாரத்திற்கும் பெயர் போனது. அந்தவகையில் டார்ஜிலிங்கில் நாம் பார்க்க வேண்டிய 8 இடங்களைப் பற்றி பார்ப்போம்.
1. டைகர் ஹில்:
இந்த டைகர் ஹில் காஞ்சன்ஜங்கா மலைத்தொடரில் இருக்கும் ஒரு மலையாகும். சூர்ய உதயத்திற்கும் சூர்ய அஸ்தமனத்திற்கும் பெயர் போன இந்த டைகர் ஹில், இயற்கை ஆர்வலர்களுக்கும் புகைப்பட நிபுணர்களுக்கும் ஏற்ற ஒரு இடமாகும்.
2. படாசியா லூப்:
டார்ஜிலிங்கின் முழு அழகைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த இடத்திற்கு செல்லலாம். பொறியியல் அற்புதம் கொண்ட இந்த படாசியா லூப், அழகான நிலபரப்பு தோற்றத்துடன் கூடிய ரயில் பாதையாகும்.
3. டார்ஜிலிங் இமாலையன் ரயில்:
இந்த ரயில் மூலம் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான பொம்மை ரயில் மலைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அழகான கிராமங்கள் வழியாக ஒரு அழகிய பயணம் செய்யலாம்.
4. பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா:
இந்த பூங்காவில் அழிந்து வரும் உயிரினங்களை நீங்கள் அதிகம் காணலாம். உதாரணத்திற்கு சிவப்பு பாண்டா, பனிச்சிறுத்தை மற்றும் இமயமலை ஓநாய் போன்ற விலங்குகளை அதிகம் காணலாம். இந்த பூங்கா இமயமலை விலங்குகளைப் பாதுகாக்கும் விதமாக கட்டப்பட்ட ஒன்று.
5. அமைதி பகோடா:
ஜலபஹர் மலையின் சரிவுகளில் அமைந்துள்ள இந்த அமைதி பகோடா, மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சியை காண்பிக்கும்.
6. ராக் கார்டன் மற்றும் கங்கா மாயா பூங்கா:
இந்த இடம் ஒருநாள் பிக்னிக்கிற்கு ஏற்ற இடமாகும். மேலும் நீர்வீழ்ச்சிகள், பாலங்கள் என இயற்கையின் அழகான ஓவியத்தை அங்கு நீங்கள் காணலாம். ஒருநாள் முழுவதும் அந்த இடத்தில் நீங்கள் செலவிட்டாலும் கூட, அந்த அழகுகளை முழுமையாகக் காண முடியாது.
7. டார்ஜிலிங் மால் சாலை:
இந்த சாலையில் நீங்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்களை அதிகம் காணலாம். அதுமட்டுமல்லாமல் பெரிய உணவகங்கள், மால்கள், கஃபேக்கள் ஆகிய இடங்கள் இங்கு நிரம்பி இருக்கும். மேலும் இங்குள்ள கட்டடக்கலைகள் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
8. மகாகல் கோவில்:
Observatory மலையில் அமைந்துள்ள இந்த கோவில் சிவபெருமானுக்கு அற்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். இங்கிருந்து நீங்கள் பார்த்தால் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சிகளைப் பார்க்கலாம்.