கடவுளின் சொந்த தேசத்தில் "தேவதையின் குளம்"! தேவிகுளம் பயண வழிகாட்டி!

devikulam-hill-station
devikulam-hill-station
Published on

கேரளாவின் இயற்கை அழகு, கலாச்சார செழுமை, அமைதியான நிலப்பரப்புகளை கொண்ட இடம்தான் தேவிகுளம்.

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று கேரளா. இதனை கடவுளின் சொந்த நிலம் என்றும் அழைக்கின்றனர்.

கேரளா அதன் உணவு வகை / குளிர்ச்சியான வெப்பநிலை, உப்பங்கழிகள் / கோவில்கள் என அனைத்திலும்மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு அதிக மனித வாடை படாத ஓர் இடம், அது மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் தேவி குளம்தான்.

இது கேரளாவின் இயற்கை அழகிலும், கலாச்சார செழுமையிலும், அமைதியான நிலப்பரப்புகளை கொண்ட இடம் ஆகும்.

இங்கு பச்சை பசேல் என்றே தேயிலை தோட்டங்கள், ஏரிகள், வனவிலங்குகள், பழமையான கோவில்களால் நிறைந்திருக்கிறது.

இது ராமரின் மனைவியான சீதை, இந்த ஊர் குளத்தின் தண்ணீரில் குளித்ததாக நம்பிக்கை. இதனால்தான் இந்த இடத்திற்கு தேவிகுளம் என்று பெயர் ஏற்பட்டது. அதாவது தெய்வத்தின் குளம் என்றும் பெயர் வந்தது.

தேவிகுளம் மலைப்பகுதி தேயிலை தோட்டங்களால் நிறைந்துள்ளது. சாகச பிரியர்கள் ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு இது சிறந்த சாய்சாக இருக்கிறது.

அடர்ந்த காடுகளால் சூழ்ந்த தேவை குறத்து ஏரியின் கரைகளில் அமர்ந்து நீங்கள் அழகை ரசிக்கலாம்.

தேசியப் பூங்கா:

இங்கு இரவி குளம் தேசிய பூங்கா அமைந்துள்ளது.

இந்த தேசிய பூங்காவில் இருக்கும் நீலகிரி டார், இதர வகை விலங்குகளான யானைகள், சிறுத்தைகள், பல அரிய வகை பறவைகளையும் நாம் காணலாம்.

இதையும் படியுங்கள்:
உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
devikulam-hill-station

இங்கு சீதைக்கு கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அந்தப் பகுதியின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கட்டிடங்களை காணலாம்.

ஒருமுறை கேரளாவின் இருக்கும் இந்த தேவிகுளம் சுற்றுலா சென்று பாருங்கள். கொச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தேவி குளம் மூணாறில் இருந்து பஸ் மற்றும் வாடகை கார், வசதிகளும் சென்று வர உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com