உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Dirang falls.
Dirang falls.

காஷ்மீர் என்றதும் நம் கண்களுக்கு முன்னால் விரியும் காட்சி என்னவாக இருக்கும். வெள்ளை பனிப்படர்ந்த மலைகள், குளுகுளு தட்பவெட்பநிலை, அழகு கொஞ்சும் இயற்கை என சொல்லிக்கொண்டே போகலாம். தேனிலவு செல்ல வேண்டும் என்றாலோ அல்லது சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாலோ முதலில் மனதில் தோன்றுவது காஷ்மீராக தான் இருக்கும். அந்த அளவிற்கு மக்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காஷ்மீரில் இருக்கும் ஒரு அதிசய அருவியை பற்றி தான் இன்று பார்க்க உள்ளோம்.

காஷ்மீரில் இருக்கும் அழகான கிராமமான டிராங், குல்மார்கில் இருக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகான கிரமாமானது ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. பசுமையான காடு, அழகான மலைத்தொடர், சாரல் வீசும் அருவிகளென்று பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

Dirang Falls காஷ்மீர் குல்மார்க்கில் உள்ள தங்மார்க் டென்சில் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகும். மற்ற அருவிகளை ஒப்பிடுகையில் டிராங் எந்த விதத்தில் தனித்துவத்துடன் இருக்கிறது என்றால், குளிர்காலங்களில் இந்த அருவியானது முழுமையாக உறைந்து காணப்படும். இத்தகைய அதிசய நிகழ்வை காண்பதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகிறார்கள். அந்த சமயம் இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு ஒரு Fairy Tale படத்தில் இருப்பது போன்ற உணர்வை தரக்கூடியது.

டிராங் நீர்வீழ்ச்சி வருடம் முழுவதுமே மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வீழ்ச்சியை காண சிறந்த மாதம் குளிர்க்காலமேயாகும். டிசம்பர் முதல் மார்ச் மாதம் இந்த நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறைந்த நிலையில் காட்சி தரும் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு வியப்பான விஷயம் என்னவென்றால், இது இயற்கையாக உருவான நீர்வீழ்ச்சி கிடையாது. மனிதர்களால் அணையிலிருந்து வரும் அதிகமான தண்ணீரை வெளியிட உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சியாகும்.

இதையும் படியுங்கள்:
Pykara Falls: அழகோவியமான பைக்காரா நீர்வீழ்ச்சி!
Dirang falls.

இந்த நீர்வீழ்ச்சியை சென்றடைவது சுலபமாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கே சாலைகள் நன்றாக அமைக்கப்பட்டிப்பதால் பனிகாலங்களில் கூட இங்கு செல்வதற்கு தடை விதிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருவிக்கு செல்ல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. குளிர்காலத்தில் நல்ல கதகதப்பான ஆடைகளை அணிந்து செல்வது சிறந்தது. பனிப்படர்ந்து இருக்கும் அருவியின் அருகில் செல்ல வேண்டும் என்று முயற்சிக்க வேண்டாம். ஏனெனில், பனி வழுக்கும் தன்மையோடு இருக்கக்கூடும். அழகான புகைப்படங்கள் எடுப்பதற்கு இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

‘நார்னியா’ போன்ற படங்களில் பார்த்த உறைந்த பனிமலையையும், நீர்வீழ்ச்சியையும் நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் இந்த நீர்வீழ்ச்சியை ஒருமுறையாவது சென்று பார்வையிடுவது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com