
"ஏழைகளின் ஏரோபிளேன் "என்று அழைக்கப்படும் இந்திய ரயில்வேயில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் ஒரு முறையாவது ரயிலில் பயணித்து இருப்பார்கள். குறைந்த செலவில் நீண்ட தூரத்தை கடக்க உதவும் வாகனமான தொடர்வண்டி பகலை விட இரவில் வேகமாக ஓடுகிறது. அதற்கான 6 காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.பகலின் போக்குவரத்து அழுத்தம்
பகல் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் அடிக்கடி இயக்கப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து அழுத்தம் காரணமாக ரயில்கள் சிக்னல்களில் நிற்கின்றன. சில இடங்களில் ஒரே பாதைகளை கடக்க வேண்டி இருப்பதாலும் ரயில் போக்குவரத்தை சீராக நிர்வகிக்க வேண்டி இருப்பதாலும் பகலில் வேகம் குறைகிறது .
2.இரவு நேரத்தில் குறைவான ரயில்கள்
பகல் நேரத்தில் பயணிகள் ரயில்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதால் பெரும்பாலான சரக்கு ரயில்கள் இரவில் இயக்கப்படுகின்றன. இரவில் தண்டவாளங்களில் குறைவான ரயில்கள் இயக்கப்படுவதால், நெரிசல் குறைவாக இருப்பதால் சிக்னல்களை நிர்வகிக்க வேண்டிய தேவை குறைவாக இருப்பதால், ரயில்கள் இரவில் அதிக வேகத்தில் செல்லமுடியும்.
3. பராமரிப்பு வேலைகள் பகலில் வளிமண்டல சூழல்கள்
பகலில், வெப்பம் மற்றும் அதிக வெப்பநிலை தண்டவாளங்களின் வெப்பவிரிவாக்கத்தை ஏற்படுத்தி, ரயில்களின் வேகத்தை குறைக்கின்றன. இரவில், குளிர்ந்த வெப்பநிலை தண்டவாளங்களை உறுதிப்படுத்துகிறது, இதனால் ரயில்கள் வேகமாக இயக்கப்படுகின்றன.
4.இரவில் தண்டவாள பராமரிப்பு இல்லை
இரவில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால் ரயில்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன.
5.சிக்னல் பிரச்னைகள்
இரவில் குறைவான ரயில்கள் செல்வதால் சிக்னல் அமைப்பு மிகவும் திறமையாக செயல்பட்டு தொடர்ந்து பச்சை சமிக்ஞைகளை பெறுவதால் தொடர்ந்து ரயில்கள் இரவில் வேகமாக செல்கின்றன.
6.குறைவான ரயில் நிறுத்தங்கள்
பகல் நேரத்தில் Local passenger ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. இரவில், பெரும்பாலான ரயில்கள் பல நிலையங்களைத் தவிர்த்துச் செல்வதால் அவை வேகத்தைத் தக்கவைத்து, குறைந்த நேரத்தில் நீண்ட தூரத்தைக் கடக்கின்றன.
மேற்கூறிய ஆறு காரணங்களால் ரயில்கள் இரவில் தங்களது வேகத்தை அதிகப்படுத்தி அதிக தூரத்தை குறைவான நேரத்தில் கடக்கின்றன.