‘சொர்க்கத்திற்கு செல்லும் பாதை' இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?

Road To Heaven
Road To HeavenImage Credits: India Narrative

ந்தியாவில் பலவிதமான சாலைகள் இருக்கின்றன. சாலைகளின் வேலை நம்மை சேரும் இடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்ப்பதேயாகும். அப்படித்தான் இந்த சாலையில் பயணிக்கும் போதும் நம்மை சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்கிறதோ என்ற சந்தேகம் வரும் அளவிற்கு அழகை கொண்டிருக்கும். அத்தகைய தனித்துவமான ஒரு சாலையைப் பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

புதிதாக திறந்திருக்கும் கவுடா-காதிர் சாலை 31.9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது நேராக யுனெஸ்கோ பாரம்பரியக் களங்களின் பட்டியலில் வரும் இடமான டோலாவிராவிற்கு நம்மை கூட்டி செல்கிறது. இந்த சாலை புஜ்- டோலாவிராவிற்கான பயண தூரத்தை கணிசமாக குறைக்கின்றது. ஹராப்பா நாகரிகம் இருக்கும் இடமான டோலாவிராவிற்கு நேரடியாக கூட்டிச் செல்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்த மிகவும் பழமையான நாகரீகமான ஹரப்பா நாகரீகம் டோலாவிராவிலே உள்ளது. ஹரப்பா நாகரீகத்தில் நகர கட்டமைப்புகள், தண்ணீரை தேக்கி வைக்கும் முறை போன்றவற்றில் முன்னோடியாக இருந்துள்ளனர். அதனாலேயே இந்த இடம் யுனெஸ்கோவால் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

கவுடா-காதிர் சாலையை கட்டும் முன்பு புஜ்- டோலாவிராவின் தூரம் 240 கிலோ மீட்டராக இருந்தது. இந்த புதிய சாலை சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவை குறைத்து சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தை பார்வையிடுவதற்கு ஏற்றவாறு வசதியமைத்து கொடுத்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் இந்த சாலையை ‘சொர்க்கத்திற்கு செல்லும் சாலை’ என்று அழைக்கிறார்கள். இந்த சாலையை இருசக்கரை வாகன ஓட்டிகள் பெரிதும் விரும்புகிறார்கள். இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது அலாதியான உணர்வை தருவதாக கூறுகிறார்கள். இந்த இடத்திற்கு வரலாற்றிலும், தொல்பொருள் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ளவர்களும் வருகிறார்கள். இந்த இடத்தின் தனித்துவமான நிலப்பரப்பு நிறைய சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது.

2023ல் இந்த சாலை சுற்றுலாப்பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகளை கவர சாலையை மேலும் அகலப்படுத்தி வசதி செய்து கொடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானின் பிரபலமான இனிப்பு வகைகளைப் பற்றி பார்க்கலாம்!
Road To Heaven

The Great Rann of Kutch, உலகிலேயே மிகப் பெரிய உப்பு பாலைவனத்தின் தனித்துவம் வாய்ந்த அழகை ரசித்துக் கொண்டே பாதையில் பயணிப்பது மனதிற்கு அமைதியான உணர்வை தருவதாக இருசக்கர வாகன ஓட்டிகளும், சுற்றுலாப்பயணிகளும் கூறுகின்றனர். இந்த சாலையை சுற்றியுள்ள வெள்ளை பாலைவனத்தை பார்த்தவாறே வாகனம் ஓட்டி செல்வது திரிலான அனுபவத்தை தருவதாக கூறுகிறார்கள்.

புஜ்- டோலாவிரா...
புஜ்- டோலாவிரா...

இந்த இடத்தை பார்வையிடுவதற்கு எல்லா காலமும் உகந்தது அல்ல. Kutch ல் தட்பவெட்பநிலை 25 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிருக்கும். குளிர்க்காலத்தில் இதன் வெப்பநிலை 8 முதல் 18 டிகிரி செல்சியஸ் இருப்பதால் இங்கு வருவதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற காலமாக இருக்கிறது.

தற்போது இவ்விடம் சுற்றுலாப்பயணிகளின் பக்கெட் லிஸ்டில் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com