எரிமலை உச்சியில் இருக்கும் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா?

Vinayagar statue on the top of volcano
Vinayagar statue on the top of volcanoImage Credits: Curley Tales
Published on

லகிலே எத்தனையோ விநாயகரை தரிசித்திருப்பீர்கள். ஆனால் தற்போதுவரை ஆக்டிவாக இருக்கும் எரிமலையின் மீது வைக்கப்பட்டிருக்கும் 700 வருட பழமையான விநாயகரை தரிசித்ததுண்டா? இந்த சிலை இந்தோனேசியாவிலேதான் உள்ளது.

இந்தோனேசியாவில் 141 எரிமலைகள் இருக்கிறது. அதில் 130 எரிமலைகள் இன்னும் ஆக்டிவாகவே இருக்கிறது. அப்படி சில காலம்வரை ஆக்டிவாக இருந்த எரிமலை தான் கிழக்கு ஜாவாவில் உள்ள Mount bromo எரிமலையாகும். 'Bromo' என்பதன் பொருள் இந்துக்களின் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை குறிக்கிறது.

ஆனால் இந்த எரிமலை தற்போது வெடிப்பதில்லை. அதற்கு காரணம் இந்த எரிமலையின் உச்சியில் இருக்கும் விநாயகர் சிலைதான் என்று அங்கிருக்கும் மக்கள் நம்புகிறார்கள்.

Tengger massif என்கின்ற பழங்குடியினர்தான் இந்த மலையைச் சுற்றி வசிக்கிறார்கள். இந்த Bromo மலை முன்பெல்லாம் அடிக்கடி அதிக அளவில் வெடித்து சிதறியிருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை தடுப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் 700 ஆண்டுகளுக்கு முன்பு  அந்த எரிமலை மேலே ஒரு விநாயகர் சிலையை வைத்ததாகவும், அன்றிலிருந்து இன்றுவரை எரிமலை வெடிக்கவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.

எரிமலை மேலேயிருக்கும் விநாயகர்தான் தங்களை காப்பாற்றுவதாக உள்ளூர் மக்கள் மிகவும் நம்புகிறார்கள். தினமும் விநாயகர் சிலைக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அப்படி பூஜைகள் நடத்தாவிட்டால், எரிமலை வெடித்து சிதறிவிடும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இங்கு விநாயகருக்கு செய்யப்படும் பாரம்பரிய பூஜைக்கு பெயர், ‘Yadnaya kasada’. இந்த பூஜை 15 நாட்களுக்கு நடத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
தென்கொரியர்களிடம் பிரபலமான ‘பிங்கர் ஹார்ட்’ என்றால் என்ன தெரியுமா?
Vinayagar statue on the top of volcano

இங்குள்ள இந்தோனேசிய பழங்குடியினர் இந்த Bromo மலையை மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இந்தோனேசியாவில் அதிகமாக இந்து மக்கள் வாழ்கிறார்கள். இங்கு சிவன் முதல் விநாயகர் வரை நிறைய இந்து கடவுள்களையும் வழிபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களின் நம்பிக்கையின்படி, விநாயகர் எல்லா தடைகளையும், பிரச்னைகளையும் நீக்குபவராக நம்பப்படுகிறார். இந்தியா, இந்தோனேசியாவில் விநாயகர் சதூர்த்தி மிகப்பெரிய திருவிழாவாக நடத்தப்படுகிறது. இந்தோனேசிய அரசாங்கம் 1998ல் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற உருவம் கொண்ட 20,000 பண நோட்டுகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com