தென்கொரியர்களிடம் பிரபலமான ‘பிங்கர் ஹார்ட்’ என்றால் என்ன தெரியுமா?

South korean finger heart symbol
South korean finger heart symbolImage Credits: The Korea herald
Published on

பிரபலங்கள் அதிகமாக தற்போது விரல்களில் இதயச் சின்னத்தை காட்டுவதை கவனித்திருப்போம். இப்படி அவர்கள் மனதில் நினைப்பதை விரல்களில் சின்னமாகப் பயன்படுத்தும்போது,  சுலபமாக ரசிகர்களிடம் அவர்களின் அன்பை வெளிப்படுத்த முடிகிறது. தென்கொரிய பிரபலங்கள் இதில் கைத்தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களே அதிகமாக கைகளில் சின்னத்தைக் காட்டும் டிரெண்டை தொடங்கி வைத்தார்கள். அதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

Finger heart தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. புகைப்படம், செல்பீ எடுக்கும்போது கைகளில் இந்த சின்னத்தைக் காட்டுகிறார்கள். இது தென்கொரிய K-Pop பிரபலங்கள் மூலமாகவே உலகமெங்கும் பரவியது. Finger heart, hand heart என்று விதவிதமான குறியீடுகளைப் பயன்படுத்தி ரசிகர்களைக் கவர்கிறார்கள்.

2010ம் ஆண்டு நடிகை Kim hye soo மற்றும் பாடகர் Nam woo hyun ஆகியோர்தான் முதன்முதலில் இந்த இதயச் சின்னத்தை காட்டினர் என்று சொல்லப்படுகிறது. கைவிரல்கள் அனைத்தையும் மடக்கிவிட்டு கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் ஒன்றின் மீது ஒன்று வைக்கும்போது இதயத்தின் வடிவம் முழுமையாக உருவாகிறது. நம்முடைய கையினை  மடக்கும்போது ஏற்படும் அளவே இதயத்தின் அளவாக சொல்லப்படுகிறது. மேலே காட்டும் இரண்டு விரல்களும் இதயத்தின் நரம்புகளைக் குறிக்கின்றன.

இன்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் வடகொரியாவின் அதிபரான கிம் ஜூங் யூங் ஆகியோரும் இந்த Finger heart ஐ காட்டும் அளவிற்கு இது இளைஞர்கள் மத்தியிலும், உலக அளவிலும் பிரபலம் அடைந்துள்ளது.

சமீப காலமாக தென்கொரியாவில் பிரபலம் அடையும் அனைத்தும் உலகம் முழுவதுமே பிரபலமாகிவிடும் அளவிற்கு இளைஞர்களுக்கு தென்கொரிய மோகம் அதிகரித்து வருகிறது. K-Pop, K drama, அழகு சாதனப் பொருட்கள், உணவுகள், உடைகள் என்று தென்கொரிய கலாசாரம் உலக மக்களை முக்கியமாக இளைஞர்களை ஈர்க்கிறது என்றே சொல்ல வேண்டும். இதை கொரியர்கள் Aegyo culture என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது மிகவும் க்யூட்டான விஷயமாகக் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அஜ்ராக் புடவையின் தனித்துவத்தை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க!
South korean finger heart symbol

புகைப்படம் எடுப்பதற்கு முன்பு எப்படி Cheese என்று சொல்வார்களோ அதேபோல விரல்களில் காட்டப்படும் இந்த சின்னத்திற்கு ‘சாராங்கே' என்பது பொருள். அதாவது 'I love you' என்பதாகும். தென்கொரியாவை பொறுத்தவரை டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு விரல்களை V வடிவத்தில் காட்டுவது பிரபலமாக இருந்தது. தற்போது விரல்களில் காட்டப்படும் இதயச்சின்னம் டிரெண்டாக உள்ளது. எதிர்காலத்தில் இது வேறு சின்னமாக மாறலாம். என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com